மேலே உள்ள முகநூல் பதிவை நேற்றுதான் பார்த்தேன். மருத்துவமனையில் மருத்துவரின் அழைப்பிற்காக காத்திருந்த அந்த நீண்ட நேரத்தில் அத்தனை பின்னூட்டங்களையும் பார்த்தேன்.
1992 உலகக் கோப்பையில் உங்களுக்கு பிடித்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட அம்பது சதவிகிதம் பேர் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கானையும் அதை விட சற்று குறைவாக இந்திய கேப்டன் முகமது அசாருதீனையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்கு அடுத்தபடியாக இலங்கையின் அரவிந்த டி செல்வாவும் நியூசிலாந்தின் மார்டின் க்ரோவும் இருந்தார்கள்.
தமிழ்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் இம்ரான் கானையும் அசாருதீனையும் அவர்களின் விளையாட்டுத் திறனுக்காக மட்டுமே தங்களின் தேர்வாக முன்னுறுத்தியிருந்தனர். அவர்களின் மதமோ அல்லது இம்ரான் கானின் நாடோ ஒரு பொருட்டாக இல்லை.
விளையாட்டை விளையாட்டாக பார்ப்பது என்பது இதுதான்.
கற்றுக் கொள்ளுங்கள் சங்கிங்களே, ஜெய்ஸ்ரீராம் முழங்கும் முன்பு . . .
No comments:
Post a Comment