Tuesday, October 17, 2023

“ஒரே நாடு, ஒரே தேர்தல் – டிமோ மோசடி

 



நாட்டில் எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு பகுதியில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது என்று டிமோ  ஒரு மொக்கைக்  காரணத்தை முன்வைத்து நாடாளுமன்றம் தொடங்கி உள்ளாட்சி தேர்தல் வரை ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்திட திட்டமிடுகிறார். துடைப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம் என்பது போல இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களின் தலைமையில் ஒரு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

இது அமலானால் என்ன ஆகும்?

நாடாளுமன்றத் தேர்தல் 2024 ல் நடைபெறவுள்ளது. அத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களின் தேர்தல்களையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்றால் பல மாநில சட்ட மன்றங்கள் அவர்களின் முழுமையான பணிக் காலத்திற்கு முன்பே முடிந்து விடும்.

உதாரணமாக  தமிழக சட்டமன்றத்தின் ஆயுள் இரண்டாண்டுகள் முன்பே முடியும். கர்னாடக சட்டமன்றத்தின் ஆயுள் நான்காண்டுகளுக்கு முன்பே முடித்து வைக்கப்படும். அப்பட்டமான ஜனநாயக படுகொலை இது.

தேர்தலுக்குப் பிறகு அந்த ஆட்சி தொடர முடியாத சூழல் வருமானால் என்ன ஆகும்?

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை அந்த மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடக்குமா அல்லது மறு தேர்தல் நடக்குமா? குடியரசுத்தலைவர் ஆட்சி பல ஆண்டுகள் நீடிப்பது ஜனநாயகமாகுமா? அது போன்ற சூழலில் அம்மாநிலங்களில் தேர்தல் நடைபெறுமானால் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” அர்த்தமற்றதாகி விடுமல்லவா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் இறந்து போனாலோ அல்லது பதவி விலகினாலோ அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது அடுத்த தேர்தல் வரை காலியாகவே இருக்குமா?

ஒரு வேளை மத்தியரசே கவிழ்ந்து போனால் என்ன ஆகும்?

நாடாளுமன்றத் தேர்தலோடு அனைத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு அவற்றுக்கும் சேர்ந்து தேர்தல் நடைபெறுமா அல்லது சட்டமன்றத் தேர்தல் நிகழும் வரை மக்களவைத் தேர்தல் நடைபெறாமல் காபந்து அரசு நீடிக்குமா?

இக்கேள்விகள் அனைத்தும் ஒரே ஒரு உண்மையைத்தான் சொல்கிறது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது.

பிகு" ரொம்ப நாள் முன்னாடியே எழுதியது. வேறு ஒரு கேலிக்கூத்து பற்றி எழுத நினைத்தேன். அதனை முடிக்க முடியாததால் இதனை பகிர்ந்து கொண்டு விட்டேன். 

 

No comments:

Post a Comment