Tuesday, May 21, 2019

கொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி


நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக, நானும் என் மனைவியும் மகனும் வாக்களிக்கச் சென்றோம். வாக்களிக்க மட்டும்தான் சென்றோம். 

சுமார் பதினைந்து குண்டர்கள், அவர்கள் அத்தனை பேரையும் நான் அவர்களின் பெயரோடு அறிவேன். எங்களை திரும்பிப் போகச் சொல்லி வற்புறுத்தினார்கள். நாங்கள் மறுத்தோம்.

அப்போதுதான் தற்போதைய ஆட்சியின் முழுமையான குணாம்சம் வெளிப்பட்டது. மம்தா பானர்ஜியின் சமூக விரோத சக்திகள் எங்களை அடிக்கத் தொடங்கினர். என் கண்ணாடி நொறுங்கியது. ஸ்டென்ட் பொறுத்தப்பட்ட இடது பக்க  நெஞ்சின் மீது குத்துக்கள் விழுந்தது. இடது கண்ணிற்குக் கீழே சிறு வெட்டுக்காயம். 

மிகவும் கடுமையாக தாக்கப்பட்ட என் மகன் வலியில் துடிக்கிறான். அடிகளைப் பெற்ற என் மனைவியின் இடது கையில் கடுமையான வலி. 

இங்கே வலி என்பது பிரச்சினை. இடதுசாரிகளான நாங்கள் ஏழெட்டு வருடங்களாக இதே கதியைத்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். 

ஜனநாயகத்தின் கல்லறையின் மேல் அடிபட்டு இழிவுபடுத்தப்பட்ட நாங்களும் எங்களைப் போன்றவர்களும் ஜனநாயகத்தை சிதைத்த அழிவு சக்திகளை பழி வாங்கும் சரியானதொரு தருணத்திற்காக காத்திருப்போம். 

இங்கே நிர்வாகமும் நிர்வாகத்தை நடத்துபவர்களும் போலியானவர்கள்.  எதற்கும் தகுதியற்ற கூட்டம் இது. தேர்தல் ஆணையமோ ஒரு மூன்றாந்தர அமைப்பாகி விட்டது. 

இச்சம்பவம் நடக்கும் வரையில் நான் சட்டத்திற்குட்பட்ட ஒரு உண்மையான குடிமகனாகவே இருந்து வருகிறேன். இனியும் அவ்வாறு இருக்க வேண்டுமா என்று சிந்திக்க வைத்துள்ளார்கள்.

என் இதர சகாக்கள், என்னைப் போலவே தாக்குதலுக்குள்ளானாலும் உயிருடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.


மேலே உள்ளது எங்கள் சங்கத்தின் பொது இன்சூரன்ஸ் பிரிவின் கிழக்கு மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கௌதம் மைத்ரா மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட வாக்கு பதிவு நடந்த நாளான 19.05.2019 அன்று முக நூலில் பகிர்ந்து கொண்டது.

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட தோழர் சுனில் மைத்ராவின் மகன் தோழர் கௌதம் மைத்ரா.

மேற்கு வங்கத்தில் எப்படிப்பட்ட அராஜக ஆட்சியை மம்தா பானர்ஜி  நடத்திக்  கொண்டிருக்கிறார் என்பதற்கு இது ஒரு சோற்றுப் பத உதாரணம்.

எனக்கு ஏற்பட்ட காயம் என்பது முக்கியமல்ல. ஜனநாயகம் காயமடைகிறதே என்பதுதான்  தோழர் கௌதம் மைத்ராவின் ஆதங்கம்.


குண்டர்களை வைத்துக் கொண்டு ஒரு ஆட்சி நடத்த முடியும் என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்து வருகிறார். கத்தி பிடித்தவனுக்கு கத்தியால்தான் முடிவு என்பது  போல வன்முறையால் ஆட்சி நடத்தும் அவரது ஆட்சிக்கு  அதே வன்முறைதான் முடிவுரை எழுதும்.  



5 comments:

  1. திரு. ராமன்,

    மே.வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தங்கள் ஓட்டுகளை பாஜகவிற்கு போட சொன்னதாக‌ 'தி வயர்' ஆன்லைன் ஊடகம் கூட சொல்கிறது.

    தங்கள் கருத்து...?

    மற்றபடி எந்த கட்சிகள் அராஜகம் செய்தாலும் அது கண்டிக்கபட வேண்டிய ஏற்றுகொள்ள முடியாத ஒன்று தான்.

    அது இன்னும் தேர்தல் காலங்களில் அராஜகம் என்பது இந்தியாவின் அசிங்கமான நடைமுறையாக மாறி நீண்ட காலம் ஆகின்றது. வேதனையளிக்க கூடிய நிலை.

    ஆனாலும் மோடியோ பஜகவோ திரும்ப வந்துவிடகூடாது என்று அகில இந்திய அளவில் ஒன்றினையும் எதிர் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சிகள் வங்கத்தில் இந்த நிலையெடுத்தது தற்கொலைக்கு ஒன்றான செயல் தவிர வேறில்லை.

    ReplyDelete
    Replies
    1. இல்லை. அது தவறான தகவல்.
      வாணலிக்கு பயந்து அடுப்பில் குதித்து விடாதீர்
      என்று மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி அங்கே சொன்னது

      Delete
    2. மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் இப்படி பல பிரிவுகள் இருந்தாலும்
      பொதுமக்கள் பார்வையில் நீங்கள் எல்லோரும் ஒருவரே
      அதுதான் இந்த சர்ச்சை

      அதைவிட மம்தா மோசமான சர்வாதிகாரியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் வங்கத்தில் யோக்கியர்கள் அல்ல . பல அரசியல் கொலைகளை செய்துள்ளனர்

      https://www.mainstreamweekly.net/article2234.html
      https://en.wikipedia.org/wiki/Nanoor_massacre

      https://en.wikipedia.org/wiki/Nandigram_violence

      Delete
    3. மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாதிப்பு என்றால்
      உங்களைப் பற்றி தெரியாதா என்று
      சொம்பைத் தூக்கிக் கொண்டு
      நியாயம் பேச மட்டும் பலரும் வந்து விடுகிறீர்கள்

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete