Friday, May 31, 2019

தேங்க் யூ மோடி


இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ளீர்கள் மோடி.

உங்கள் ஆட்சியில் நாடு முழுதும் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடும் என்று உங்களின் முதல் காலகட்டத்தில் எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. உங்களால் நல்லது செய்ய முடியாது, ஆனால் கெட்டது செய்து அதிலே மகிழும் சேடிஸ்ட் என்பதால்தான் உங்கள் மீது எதிர்பார்ப்பு கிடையாது. அது போலதான் உங்கள் ஆட்சிக்காலம் இருந்தது.

இப்போது இரண்டாம் ஆட்சிக்காலத்திலும் நல்லது நடக்கும் என்ற எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால் கண்டிப்பாக கெட்டது செய்வீர்கள். ஏனென்றால் நீங்கள் நிஜமான வில்லன். 

பிறகு எதற்கு நன்றி என்று கேட்கிறீர்களா?

உங்கள் அமைச்சரவைப் பட்டியலைப் பார்த்தேன்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி சாத்வி பிராக்யா தாகூரை உங்கள் அமைச்சரவையில் இணைத்து அவருக்கு தீவிரவாத தடுப்புத் துறை பொறுப்பு கொடுக்காமல் விட்டீர்களே, அதற்காகத்தான் இந்த நன்றி

6 comments:

 1. Even those idiots forgot, you remind then to give minister post. ridiculous!!!!

  ReplyDelete
  Replies
  1. இப்பதிவு ஒரு பகடி என்பது புரியவில்லையா?

   Delete
 2. i think you really became a mental case. it is going to be fun for next 5 years. poor family of yours. cheers.....

  ReplyDelete
  Replies
  1. முட்டாள்களும் அயோக்கியர்களும் சேர்ந்து மிகப் பெரிய முட்டாளும் வடிகட்டிய அயோக்கியருமான மோடியை மீண்டும் கொண்டு வந்து விட்டீர்கள். உங்கள் ஆணவத்தை அம்பலப்படுத்த, அயோக்கியத்தனங்களை தோலுரிக்க இன்னும் ஐந்து ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பேன். அது காமெடி என்று சமாளிக்க நினைத்தாலும் உண்மை சுடத்தான் செய்யும்.

   Delete
 3. Dear Raman
  i think most people lookr at you (your modi hate postings) and treat you like a mental cases standing at bus stands and blabber all day long. All your postings are light version of Vinavu postings. Do they make any difference? I wish BJP comes into big picture in TN too just like West Bengal.
  Modi Bakht/ ModiDas

  ReplyDelete
  Replies
  1. அன்பான அனாமதேயம்,

   அன்பான ராமன் என்று விளித்து விஷத்தை கக்கும் உங்களுக்கும் ஆபாச வார்த்தைகள் மட்டுமே பேசத் தெரிந்த உங்கள் சக சங்கிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

   மோடி ஒரு பொய்ப்பிம்பம் என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதை ஜீரணிக்க முடியாத கையாலாகததனமே இப்படிப்பட்ட எதிர்வினைகளை உங்களைப் போன்றவர்களை எழுத வைக்கிறது. அது என் தவறல்ல, உங்கள் தவறு. உங்கள் மோடியின் தவறு.

   மோடி மீது நான் வைக்கிற எந்த விமர்சனத்திற்கும் எந்த ஒரு சங்கியாலும் எந்த காலத்திலும் பதிலளிக்க முடிந்ததில்லை என்பதுதான் யதார்த்தம்.. ஏனென்றால் மோடி மீதான விமர்சனங்கள் அனைத்தும் உண்மை.

   மோடியை நீங்கள் நேசிக்கலாம். அதற்கு உங்கள் மதப் பற்றோ அல்லது மத வெறியோ காரணமாக இருக்கலாம். மோடியால் பலனடையக் கூடிய ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளியாகவோ அல்லது அதன் ஊழியராகவோ கூட இருக்கலாம். ஒரு கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர் என்பதால் கூட நீங்கள் மோடியை ஆதரிக்கலாம். காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாதியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் மீண்டும் தொடர மோடி தொடர வேண்டும் என்று நினைக்கிற உங்கள் ஜாதி மனப்பான்மை கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

   ஆனால் மோடியை நேசிக்க எனக்கு ஒரு காரணம் கூட இல்லையே.

   ஐந்தாண்டுகளில் அவரது ஆட்சியின் சாதனை என எதுவுமே இல்லையே.

   யார் இந்த மோடி?

   குஜராத்திலே இஸ்லாமியர்களை கொன்று குவித்து ரத்த ஆற்றிலே அந்த மாநிலத்தை மூழ்கடித்த ஒரு மனிதனை வெறுக்காமல் நேசிக்கிறவர்களின் மன நிலையைத்தான் மருத்துவ மனையில் சோதிக்க வேண்டும்.

   மோடி ஒரு பொய்யர்
   மோடி ஒரு ஊதாரி
   மோடி ஒரு வாய்ச்சொல் வீரர்.
   மோடி ஒரு முட்டாள்
   மோடி ஒரு நிர்வாகத் திறனற்றவர்.
   மோடி ஒரு கொலைகாரர்
   மோடி ஒரு மத வெறியர்
   மோடி ஒரு மொழி வெறியர்
   மோடி ஒரு நடிகர்
   மோரி ஒரு சந்தர்ப்பவாதி
   மோடி ஒரு ஜனநாயக விரோதி
   மோடி ஒரு சர்வாதிகாரி
   மோடி கொள்ளைக்காரர்களின் கூட்டாளி
   மோடி பெரு முதலாளிகளின் சேவகர்
   மோடி பெரு முதலாளிகளின் தரகர்
   மோடி ஏழை மக்களின் எதிரி
   மோடி தேச பக்தியற்றவர்
   மோடி ராணுவ வீரர்கள் உயிர் மீது அக்கறையற்றவர்
   மோடி தொழிலாளர்களின் எதிரி
   மோடி பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிரானவர்.
   மோடி விவசாயிகளின் பகைவன்
   மோடி அறிவியலுக்கு எதிரானவர்

   இவை எல்லாம் ஏதோ வெறுப்பில் எழுதப்பட்டவை அல்ல. சொல்லப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டு குறித்தும் கடந்த ஐந்தாண்டுகளில் பல நூறு பதிவுகளை ஆதாரங்களோடு எழுதியிருக்கிறேன்.

   இப்படிப்பட்ட மோடியை ஆதரிக்கிற உங்களைப் போன்றவர்களில் இரண்டு பிரிவுகள் உண்டு.

   ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும்.
   அல்லது அயோக்கியராக இருக்க வேண்டும்.

   ஆபாச வார்த்தைகளில் பேசுகிற சங்கி முதல் பிரிவு என்றால்
   இனிக்கும் வார்த்தைகளை விஷத்தை கலக்கும் நீங்கள் இரண்டாவது பிரிவு.

   நான் ஒன்றும் சங்கியில்லை என்று பதிலளிக்காதீர். அதுதான் மிகப் பெரிய அயோக்கியத்தனம். மோடி பக்தன்/மோடி தாசன் என்று புனைப்பெயரை வைத்துக் கொண்டு அப்படி செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

   உங்கள் மோடியை விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால் ஒன்று செய்யுங்கள்.

   மேலே கொடுத்துள்ள பெரிய பட்டியல்படி அல்லாமல் இனியாவது அவரை மாற்றிக்கொண்டு நேர்மையோடு சொல்லுங்கள்.

   ஆனால் அது மிகவும் சிரமம்.

   பின் குறிப்பு : மோடியை நேசிக்கிறேன் என்று உங்களால் உங்கள் சொந்த அடையாளத்துடன் ஏன் சொல்ல முடியவில்லை. மோடி பக்தன்/மோடி தாசன் என்று புனைப்பெயரில் ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பாவம் உங்களுக்கே ரொம்பவும் வெட்கமாக இருக்கிறது போல. அந்த அளவில் உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறது.

   Delete