Thursday, May 16, 2019

நீங்கள் புதிய மதமா மோடி?



கோட்சே இந்து தீவிரவாதியா இல்லை இந்துத்துவ தீவிரவாதியா இல்லை ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும்,

தீவிரவாதச் செயலில் ஈடுபடுபவர் யாரும் இந்துவாக இருக்க முடியாது என்று ஆணித்தரமாக சொல்லும் மோடி அவர்களே,  பின் வரும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் .

பாபர் மசூதியை இடித்தது,

அப்போதைய மும்பைக் கலவரம், பின்னர் குஜராத் கலவரம் தொடங்கி கோவைக் கலவரம், முசாபர் நகர் கலவரம் என்று எண்ணற்ற கலவரங்களை  இந்தியா முழுதும் நடத்தியவர்கள் யார்?

தூங்கிக் கொண்டிருந்த ஸ்டெய்ன்ஸ் பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களையும் கொன்றது யார்?

மாட்டுக்கறியின் பெயரில் முகமது அக்லக் தொடங்கி இருபதுக்கும் மேற்பட்டவர்களை கொன்றது யார்?

உங்கள் கொள்கைகளோடு முரண்பட்ட நரேந்திர தாபோல்கர்,  கோவிந்த் பன்சாரே, எம்.எம்.குல்பர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரை சுட்டுக் கொன்றது யார்?

சம்ஜுத்துவா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி, ஆஜ்மீர் தர்கா, மாலேகான் வெடி குண்டு வெடிப்பு வழக்குகளின் குற்றவாளியும், பிணை பெற்று இப்போது உங்கள் வேட்பாளராக போபாலில் போட்டியிடும் சாத்வி பிராக்யா தாகூர் யார்?

இந்தக் குற்றச்செயல்கள் எல்லாம் தீவிரவாத நடவடிக்கைகள் இல்லாமல் அமைதியை பரப்பும் முயற்சிகளா?

இந்த தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நீங்கள் எல்லாம் இப்போது இந்து கிடையாதா?

வேறு ஏதாவது புதிய மதத்தை உருவாக்கியுள்ளீர்களா?




4 comments:

  1. நிலவழகன் சுப்பையாMay 17, 2019 at 8:48 AM

    இந்த பதிவை கோட்ஸே கமல் சர்ச்சை பற்றி ஒரு சிறந்த பதிவு பதிவாளர் ஒருவர் போட்டிருக்கின்றார்
    அதில் ஒரு சைக்கோ வாந்தி எடுத்திருப்பதை கமெண்ட் பகுதியில் பாருங்க

    சைக்கோ பெயர் நான் கூறவேயில்லை
    கமெண்ட் படிக்கும் போது சைக்கோ யாரென்று தெரியும்

    http://swamysmusings.blogspot.com/2019/05/blog-post_16.html

    ReplyDelete
  2. //தீவிரவாதச் செயலில் ஈடுபடுபவர் யாரும் இந்துவாக இருக்க முடியாது என்று ஆணித்தரமாக சொல்லும் மோடி அவர்களே//

    தோழர், தீவிரவாத செயலில் ஈடுபடும் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது என்று இங்கே இலங்கை இஸ்லாமிய மத தலைவர்களும் சொல்கிறார்கள்.
    ஆக, இந்து மற்றும் பவுத்த மக்களுக்கு எப்போதும் கற்றுக்கொடுப்பது இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தான் என்பதை நாம் ஏற்றுகொண்டே ஆக வேண்டும்.

    நான் நாத்திகவாதி, எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை.

    ReplyDelete
  3. வழக்கம்போல மர மண்டையாக உளறி கொட்டியுள்ளார் உலக நாயகன் கமல். கோட்ஸே இந்து தீவிரவாதியாம். வரலாறு தெரியவில்லை. கோட்ஸேவை தீவிரவாதியாக்கியது மதமல்ல. மதத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்திய இயக்கங்களே. அதே இயக்கங்களே இன்றைக்கும் சாத்வி போன்ற தீவிரவாதிகளை பயன்படுத்துகின்றன. தீவிரவாதத்துக்கு எந்த மதமுமில்லை. மனித விரோத இயக்கங்களே காரணம். இந்த உண்மையை பேச கமலுக்கு முதுகெலும்பு இல்லை. கோட்ஸேவை இந்துக்களுடன் சம்பந்தப்படுத்தி அவர்களை புண்படுத்திய கமலுக்கு கண்டனங்கள்.

    ReplyDelete
  4. வழக்கம்போல மர மண்டையாக உளறி கொட்டியுள்ளார் உலக நாயகன் கமல். கோட்ஸே இந்து தீவிரவாதியாம். வரலாறு தெரியவில்லை. கோட்ஸேவை தீவிரவாதியாக்கியது மதமல்ல. மதத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்திய இயக்கங்களே. அதே இயக்கங்களே இன்றைக்கும் சாத்வி போன்ற தீவிரவாதிகளை பயன்படுத்துகின்றன. தீவிரவாதத்துக்கு எந்த மதமுமில்லை. மனித விரோத இயக்கங்களே காரணம். இந்த உண்மையை பேச கமலுக்கு முதுகெலும்பு இல்லை. கோட்ஸேவை இந்துக்களுடன் சம்பந்தப்படுத்தி அவர்களை புண்படுத்திய கமலுக்கு கண்டனங்கள்.

    ReplyDelete