Saturday, May 4, 2019

எங்ககிட்ட ஏண்டா கேட்கறீங்க?
மோடி அபிமானிகள் நாகரீகமாகவும் அநாகரீகவும் ஆபாசமாகவும் ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

“மோடி மீண்டும் வந்தால் என்ன செய்வீர்கள்?”

என்பதுதான் அந்த அதி மேதாவித்தனமான கேள்வி

“மோடி மீண்டும் வந்தால் தீக்குளித்து விடுவீர்கள் போல” என்று இன்னொரு அனானி உள்ளமெல்லாம் வக்கிரமாக சொன்னது.

பாவம் அவர்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியவில்லை.

கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை அவர்களின் பல்வேறு பணிகளில் தேர்தலும் ஒன்று.

கம்யூனிஸ்டுகள் தேர்தலில்  போட்டியிடுவது என்பது நாடாளுமன்ற, சட்டப் பேரவைகளை பயன்படுத்திக் கொண்டு மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற பாடுபடுவது.

முதலாளிகளுக்கு சேவகம் செய்யவோ, அவர்களிடம் வாங்கிய எலும்புத் துண்டுகளுக்கு விசுவாசமாக வாலாட்டவோ பதவிக்கு வர முயற்சிக்கவில்லை.

கம்யூனிஸ்டுகள் பொறுப்பிற்கு வந்தால் அது மக்களுக்குத்தான் நல்லது. அப்படி வரவில்லையென்றால் அது மக்களுக்குத்தான் இழப்பு.

எனக்கு ஓட்டு போடாவிட்டால் எதுவும் செய்ய மாட்டேன் என்று மிரட்டும் மேனகா காந்தி போன்ற பாஜக ஆட்கள் கிடையாது கம்யூனிஸ்டுகள்.

ஆனால்

தேர்தலை அரசியல் மூலதனமாக கருதும் பாஜகவினர்தான் தோல்வி அடைந்து விட்டால் இடிந்து போய் விடுவார்கள். ஆளுங்கட்சி என்ற ஆணவத்தில் ஆட முடியாதே என்று ஏங்கிப் போய் விடுவார்கள். 

அதிலும் ஐந்தாண்டு காலம் உல்லாச வாழ்வை மக்களின் வரிப்பணத்தில் அனுபவித்து வந்த மோடியின் மன நிலை என்ன ஆகும்?

தோற்றுப் போய்விட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை மோடியிடம் கேளுங்கள்.
எடுபிடி எடப்பாடியிடம் கேளுங்கள்

எங்களிடம் கேட்காதீர்கள்.

தேர்தலில் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி, வருகிற ஆட்சி மக்களுக்கு எதிராக செயல்பட்டால் மக்களை திரட்டிப் போராடுவோம், முன்னை விட உறுதியாக, முன்னை விட வேகமாக

7 comments:

 1. Appreciating your resolve.

  ReplyDelete
  Replies
  1. this is the only thing he can say. he cannot tell anything. they will fight for things that majority of the people never cared (this is their survival strategy).
   Actually what ever he said about Modi and BJP are their (communists) mode of operandi.

   Delete
  2. மோடி ஐந்து வருடத்தில் கிழித்தது என்ன என்று சொல்லு. அதுவும் உன் அடையாளத்தோடு சொல்லு. முதுகுக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு இருக்க கோழைக்கெல்லாம் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லக் கூட அருகதை கிடையாது. தூ! இப்படி அனாமதேயமா இருக்கறதெல்லாம் ஒரு பிழைப்பு!

   Delete
 2. fool: if communists are as good as you portray why people never elect you? Explain why states goverened by communists never developed to atleast even 2nd world (eastern european - before breakage of USSR) level? explain that before your bullshitting.

  ReplyDelete
  Replies
  1. வார்த்தையை அளந்து பேசு. ஐந்து வருடமா உல்லாசமா, ஊர் சுத்தின ஒரு ஊதாரியை ஆதரிக்கறவனுக்குப் பேச்சைப் பாரு! சொந்த அடையாளத்தோட எழுத முடியாதவனுக்கு இங்கிலிஷ் ஒரு கேடு! அயோக்கியனுங்களா

   Delete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. உன் அடையாளத்தைச் சொல்ல முடியவில்லை. உன் பிறப்பின் ரகசியத்தைச் சொல்கிறாய். சங்கிகளின் இழி குணம் பிறப்பு சார்ந்தது என்பது புரிகிறது

   Delete