Friday, May 10, 2019

நீங்களும் செல்லலாம் மோடி, ஆனால் ???


மோடிக்கு நச்சென்று ஒரு ஆலோசனை . . .

ஐ.என்.எஸ் விராத் போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி லட்சத்தீவிற்கு உறவினர்களோடு உல்லாசப்பயணம் போனார் என்று வழக்கம் போல மோடி ஒரு பொய்யை அள்ளி விட்டுள்ளார்.

ஐ.என்.எஸ் விராத் போர்க்கப்பலில் லட்சத்தீவிற்கு ராஜீவ் காந்தி சென்றது உண்மை, அவரோடு சோனியா காந்தி சென்றதும் உண்மை. ஆனால் மற்ற உறவினர்கள் சென்றது என்பது அபாண்டமான பொய் என்றும் லட்சத்தீவிற்கு ராஜீவ் காந்தி சென்றது ஒரு அரசு முறைப் பயணமே என்பதை முன்னாள் கடற்படைத் தளபதிகள் அட்மிரல் ராம்தாஸ் உள்ளிட்டோர் கடுமையாக மறுத்துள்ளனர்.

அரசுமுறைப் பயணங்களின் போது பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரோடு அவர்களின் மனைவி உடன் வரலாம் என்ற விதி உள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அன்றைய தேதியில் லட்சத் தீவின் நிர்வாகியாக இருந்தவரும் அப்போது ராஜீவ் காந்தியின் பயண விபரங்கள் என்னென்ன என்பதையும் அரசு வேலைகள் முடிந்த பின்பே இன்னும் இரண்டு நாட்கள் தங்கலாம் என்று முடிவெடுத்ததாகவும் அப்போது அமிதாப் பச்சன் உள்ளிட்ட சில விருந்தினர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் சொந்த செலவில் வாடகை  ஹெலிகாப்டரில் வந்தனர். அவர்கள் தங்குவதற்கான செலவை அவர்களே செலுத்தினர், கூடுதலாக இரண்டு நாட்கள் விருந்தினர் மாளிகையில் தங்கியதற்கு ராஜீவ் காந்தி பணம் செலுத்தினார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் சொன்ன பொய்யை பிடித்துக் கொண்டு மோடியும் காவிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். தொங்கட்டும், தொங்கட்டும்.

தோழர் வி.எஸ்.நல்வாடே - எங்கள் அகில இந்திய துணைத் தலைவர், மேற்கு மண்டலத்தின் தலைவர். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அவர் சொன்ன கருத்து நச்சென்று இருந்தது.

1976 ல் நான் ஐ.என்.எஸ் விக்ரந்த் போர்க்கப்பலில் பணியாற்றினேன். அப்போது இந்திரா காந்தி விக்ரந்த் போர்க்கப்பலில் நான்கு நாட்கள் பயணம் செய்தார். அவருடைய அப்பயணம் என்பது  அப்போது கடற்படை வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.  

விராத் போர்க்கப்பலுக்கு பொறுப்பானவர்கள், எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று உறுதியாக சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும் அவதூறு பேசக் கூடாது. அவர்கள் நிஜமான சௌக்கிதார்கள்.

எந்த ஒரு பிரதமருக்கும் தன் மனைவியோடு செல்வதற்கான உரிமை  உள்ளது. தற்போதைய பிரதமர் வேண்டுமானால் அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளட்டும்.

என்ன மோடி?

போர்க்கப்பலில் ஒரு பயணம்தான் மனைவியோடு போய் விட்டுத்தான் வாங்களேன் !

ஆனால்

அவதூறு செய்யும் உங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள்தான் பிடிக்காதே!

No comments:

Post a Comment