Sunday, April 14, 2019

பறக்கும் படைகள் பதுங்கி விட்டனவா?



வியாழன் அன்று திருப்பத்தூருக்கு பயணம்,
வெள்ளியன்று வாணியம்பாடி, குடியாத்ததிற்கு பயணம்,
இன்று சென்னைக்கு பயணம்.

இந்த மூன்று பயணங்களின் போதும் சாலையில் எங்கேயும் பறக்கும் படையையே காணவில்லை.

ஏன்?

ஆளுங்கட்சி பணத்தை எடுத்துச் செல்லப்போவதாக தகவல் சொல்லி அதனால் பறக்கும் படைகள் பதுங்கி விட்டனவா?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பறக்கும் படை பல்பு வாங்கிய ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை மீள் பதிவு செய்கிறேன்.

ஞாபகம் வருதே ஏப்ரல் 18, 2014

கட்டைப் பார்த்து ஏமாந்து போன காவலர்கள். வட போச்சே

இது நேற்று நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி.


சிதம்பரத்தில் ஒரு தோழரது மகளின் திருமணம். அதற்காக காரில்
சென்றிருந்தோம். விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்காக இரண்டு பிரசுரங்கள் தயார்
செய்திருந்தோம். 



அவற்றை போகும் வழியில் பண்ருட்டியில் கொடுத்து விட்டால்
அங்கிருந்து எடுத்துக் கொள்வதாக விழுப்புரம் தோழர் சொல்லி
இருந்தார். எனவே டிக்கியில் அந்த இரண்டு கட்டுக்களையும்
வைத்திருந்தோம்.



திருவண்ணாமலையை நெருங்குவதற்கு முன்பாக வண்டி
நின்றது. தூங்கிக் கொண்டிருந்த நான் முழித்துப் பார்த்தால்
வண்டிக்கு முன்பாக இரண்டு காவலர்கள். டிக்கியை திறந்து
காண்பியுங்கள் என்று ஒருவர் அதட்டல் போட்டார்.



அவர்கள் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை. 



டிக்கியை திறந்ததும் ஒரு காவலர்  உற்சாகமாக சாலையின்
ஒரமாக மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த ஏட்டையாவைப்
பார்த்து " சார் இரண்டு கட்டு இருக்கு" என்று குரல் கொடுக்க
அவரும் பரபரப்பாக கார் அருகே வந்தார்.



கட்டுக்களின் வெளியே சொருகி வைத்திருந்த பிரசுரத்தை
எடுத்து இதுதான் கட்டிற்குள்ளும் உள்ளது என்று சொன்னாலும்
அவர் திருப்தியடையாமல் பிரியுங்கள் என்றார். 



பிரித்ததும் அவர் முகம் போன போக்கே பரிதாபமாக இருந்தது.
"கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்ககிட்ட நோட்டீஸ்தான் சார் இருக்கும்
காசெல்லாம் இருக்காது, கிடையாது" என்றதும் இன்னும் அசடு
வழிந்தார்.



கிளம்புங்க சார் என்று எங்களை அனுப்பி விட்டு மீண்டும் 
ஓய்வெடுக்க மர நிழலுக்கே போய் விட்டார்.



பாவம் அந்த கட்டுக்களில் பணம் இருந்திருந்தால் அவரது
பெயரும் புகைப்படமும் பத்திரிக்கைகளில் வந்திருக்கும்.



 "வட போச்சே".

மேலே உள்ள படம் கூகிள் உதவி

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. கூடிய சீக்கிரம் நீ அப்படி நடு ரோட்டில் அலையப்போகிறாய். மக்கள் உன்னை கல்லால் அடித்து கொல்லப் போகிறார்கள். உன் சாவின் போது நீ யார் என்பது எல்லோருக்கும் தெரிய வரும். உன் குடும்பத்தினர் கூட உன் பிணத்தை எடுக்க மாட்டார்கள். அழுகிப் போய் பன்றிகள் கூட உன்னை சீண்டாது

      Delete