Thursday, April 4, 2019

இந்திரா காந்தி இஸ்லாமியரா? ஓவரா அளக்காதீங்கடா . . .

இந்திராவின் இறுதிச் சடங்கு – பொய்க்கு அளவில்லையா புளுகர்களே

ஒரு புதிய வதந்தியை சங்கிகள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அது என்ன  தெரியுமா?

இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கின் போது ராஜீவ் காந்தி இஸ்லாமிய முறைப்படி வழிபடுகிறார். ஆகவே அவர் முஸ்லீம். பிறகு ராகுல் காந்தி மட்டும் எப்படி இந்துவாக இருக்க முடியும்?அதற்கு ஆதாரமாக மேலே உள்ள படம் சொல்லப்படுகிறது.

யார் என்ன மதம் என்பது  அவசியமற்ற பிரச்சினை. மத உணர்வுகளை தூண்டக்கூடிய விதத்தில் பேசக்கூடாது என்று இருந்தாலும் மோடியும் பாஜகவும் வேறு எதைப்பற்றியும் பேசுவதில்லை. 

சரி இவர்கள் சொல்வது நிஜமா?

1984 ன் இறுதியில் தியேட்டருக்குச் சென்று திரைப்படம் பார்த்தவர்கள் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். மதுரையில் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த காலம்.

படம் ஆரம்பிக்கும் முன்பாக இரண்டு விஷயங்கள் திரையிடப்பட்டன.

அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போது உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நேரம் அது.

அதனால் எம்.ஜி.ஆர் உடல் நலன் பெற்று திரும்பி வர வேண்டும் என்பதற்காக

“ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டுவேன்” என்ற ஒளி விளக்கு திரைப்பட பாடலோ

அல்லது

“நீங்க நல்லா இருக்கனும், நாடு முன்னேற” என்ற இதயக்கனி திரைப்படப் பாடலோ

ஒளி பரப்பப்படும்.

அதற்கும் முன்பாக இந்திரா காந்தி அவர்களின் இறுதி நிகழ்ச்சி ஒளி பரப்பாகும்,  அவரது வீட்டில் தொடங்கும்  இறுதி  ஊர்வலத்திலிருந்து கடைசியாக யமுனை நதிக்கரையில் அவரது சடலம் எரியூட்டப்படுகிற வரை காண்பிப்பார்கள். ராஜீவ் காந்தி சிதைக்கு எரியூட்டுகிற போது அரங்கத்திற்குள் அழுகைக்குரல் கேட்கும். 

இந்திரா காந்தியின் பேரன்கள் ராகுல் காந்திக்காகவும் வருண் காந்திக்காக பெண்கள் அனுதாபப்பட்டு கண்ணீர் சிந்துவதையும் கண்டுள்ளேன். அதிலும்  சிறுவனான வருண் காந்தி ஒரு காகிதத்தை கசக்கி தூக்கியெறிந்து விளையாடும் போது அது உச்சத்திற்குச் செல்லும். சுடுகாட்டிலில் இருந்தாலும் கூட பிரியங்கா காந்தி மீது உடனடியாக மையல் கொண்ட வாலிபர்களையும்  மதுரை மற்றும் நெய்வேலி திரை அரங்குகளில் பார்த்திருக்கிறேன்.

இப்படி சந்தனக் கட்டைகளையும்  குடம் குடமாக பாலையையும் நெய்யையும் விரயம் செய்துள்ளார்களே என்று எங்கள் ஹாஸ்டல் ரூமில் நடந்த காரசார விவாதம் கூட நினைவுக்கு வருகிறது.

எந்த நாட்டில் ஒரு இஸ்லாமிய பெண்மணியை எரியூட்டி தகனம் செய்துள்ளார்கள்?

ஏண்டா பொய் சொல்வதற்கும் புளுகுவதற்கும் ஒரு அளவு கிடையாதா?

ஒவ்வொரு முறையும் சங்கிகளின் பொய்கள் அம்பலமானாலும் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதே கிடையாது. முகத்திலேயே உமிழ்ந்தாலும் துடைத்துக் கொண்டு அடுத்த பொய்யை சொல்ல கிளம்பி விடுகிறார்கள்.

மோடிக்கே வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை என்று எதுவும் இல்லாத போது அவரது சிஷ்ய கேடிகளுக்கு மட்டும் எப்படி இருக்கும்!

பிகு ;

மேலே சங்கிகள் பரப்பிய அந்த படம், எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்தூல் கபார் கான் அவர்களின் இறுதி நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படம். பார்சி இனத்தைச் சேர்ந்த ஃபெரோஸ் காந்தியை இஸ்லாமியர் என்று இவர்கள் பல வருடங்களாக பரப்பிக் கொண்டிருக்கும் கட்டுக்கதையின் நீட்சியே இந்த பொய்த்தகவலும்.10 comments:

 1. இப்படியெல்லாம் கூடவா பொய் சொல்வார்கள்?

  ReplyDelete
 2. இந்திரா காந்தி பிறப்பால் இந்துதான் தான்

  ஆனால்

  அவர் பெரோஸ் காண்டி யை திருமணம் செய்த போது அவர் லண்டனில் மதம் மாறினார்
  இஸ்லாமிய முறைப்படி அந்த திருமணம் நடந்தது

  ஆனால் நேருவுக்கு இது பிடிக்கவில்லை

  ஆனால் பெரோஸ்ஐ டிவோஸ் பண்ணிய பின் அவருக்கும் இஸ்லாமுக்கும் எந்த தொடர்பும் இல்லை

  ReplyDelete
  Replies
  1. காண்டி என்று பெரோஸ் காந்தியின் பெயரை மாற்றிச் சொல்வதிலிருந்துதான் காவிக் கயவர்களின் பித்தலாட்டமே தொடங்குகிறது. அதையே நீங்களும் சொல்லியுள்ளீர்கள்

   Delete
  2. பெரோஸ் முஸ்லிம் அல்ல
   இந்து என்று சொல்ல வேண்டியது தானே

   ஏன் தயக்கம் ? கமான்

   Delete
  3. அப்படி கட்டுக்கதை அளக்க நான் காவி அல்ல மிஸ்டர் அனானி

   Delete
 3. "காண்டி என்று பெரோஸ் காந்தியின் "
  .
  நேர்மையாக பேச கற்றுக்கொள்ளுங்கள் வேலூர் ராமன்

  Feroze Jehangir Ghandy இதை எப்படி உச்சரிப்பது மிஸ்டர் ராமன் ?

  காந்தி என்பது குஜராத் வைஷ்ய இந்து குடும்ப பெயர் .. முஸ்லீம் பெரோஸ் க்கு எப்படி வரும் என்று சிந்திக்க முடியாதவரா தாங்கள் ?

  Early life
  Born as Feroze Jehangir Ghandy to a Parsi family at the Tehmulji Narima hospital situated in Fort, Bombay, his parents, Jehangir Faredoon Ghandy and Ratimai (formerly Ratimai Commissariat), lived in Nauroji Natakwala Bhawan in Khetwadi Mohalla in Bombay. His father Jahangir was a marine engineer in Killick Nixon and was later promoted as a warrant engineer.[5][6] Feroze was the youngest of the five children with two brothers Dorab and Faridun Jehangir,[7][8] and two sisters, Tehmina Kershashp and Aloo Dastur. The family had migrated to Bombay from Bharuch in South Gujarat where their ancestral home, which belonged to his grandfather, still exists in Kotpariwad.[9]

  In the early 1920s, after the death of his father, Feroze and his mother moved to Allahabad to live with his unmarried maternal aunt, Shirin Commissariat, a surgeon at the city's Lady Dufferin Hospital (biographer Katherine Frank has speculated that Feroze was in fact the biological son of Shirin Commissariat.[10]) He attended the Vidya Mandir High School and then graduated from the British-staffed Ewing Christian College

  ReplyDelete
  Replies
  1. அனாமதேயமாய் இருப்பவர்கள் எனக்கு நேர்மையைப் பற்றி உபதேசிக்க வேண்டாம். பெரோஸ் காந்தி முஸ்லீம் அல்ல. பார்சி இனத்தைச் சேர்ந்தவர். அவரை இஸ்லாமியர் என்று கூறுவது காவிகளின் இடைச் செறுகல். லண்டனில் திருமணம் நடந்தது என்பதும் ஒரு கட்டுக்கதை. அந்த கீழ்த்தரமான கற்பனைக்கு உள் நோக்கமும் உண்டு. நேரு குடும்பத்தை அசிங்கப்படுத்த காவிகள் எந்த அளவிற்கு கீழ்த்தரமாக சென்றார்கள் என்பதும் தெரியும்.
   அனாமதேயமாய் வருபவர்களுக்கு நேர்மையை கற்றுக்கொடுக்கும் அருகதை கிடையாது

   Delete
 4. இந்திரா காந்திக்கும் பெரொஸ் காந்திக்கும் விவாக ரத்து நடந்தது என்பதும் புளுகுதான்

  ReplyDelete
 5. எனக்கு தெரிந்து எங்கள் நிறுவனத்திலெயே பிஜூ ஜார்ஜ், பிஜூ பத்மநாபன் என்று இரண்டு ஊழியர்கள் உள்ளார்கள். ஒரே பெயர், இரண்டு மதங்கள்.

  ReplyDelete
 6. ஒரு தலைவரின் மதத்தைப் பற்றிய சர்ச்சை மிகவும் வேதனையளிக்கிறது. அதிலும் பொய்யான தகவல்களைக் கூறி அதை உண்மையென்று நிறுவப்பார்க்கும் சிலரின் செயல் மிகவும் தவறு.

  ReplyDelete