Friday, April 12, 2019

வோட்டு போட்டா மட்டும் போதுமாம்



தேர்தல் பத்திரங்கள் போல மிக மோசமான மோசடி எதுவும் கிடையாது.

பெரு நிறுவனங்கள் அரசியல் கட்சிக்கு திருட்டுத்தனமாக அளிக்கும்  சட்டபூர்வ முலாம் பூசுகிற வேலை இது. இதிலும் கூட யார் பணம் கொடுத்தார்கள் என்பது அந்த அரசியல் கட்சிகளுக்கே தெரியாது என்பது ஒரு ஏற்பாடு.

இந்த முறை அகற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது.

அரசியல் கட்சிகள் பெறும் நிதி போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற வாதத்திற்கு

மத்தியரசு சொல்லியுள்ள பதில் என்ன தெரியுமா?

"வாக்காளர்கள் வோட்டு போட்டால் மட்டும் போதும். அரசியல் கட்சிக்கு யார் நிதி தருகிறார்கள் என்பதை எல்லாம் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை"

மத்தியரசு ஏன் இப்படி சொல்கிறது?

ஸ்டெரிலைட் நிறுவனத்திடமிருந்து பாஜக காசு வாங்கிய தகவல் தெரிந்தால் தூத்துக்குடியில் வோட்டு விழாது.

இது ஒரு உதாரணம்.

மத்தியரசு அந்தந்த பகுதி மக்களை யாரிடம் எவ்வளவு ரூபாய்க்கு விற்றுள்ளது என்று தெரியக்கூடாதல்லவா!!!

No comments:

Post a Comment