Saturday, April 6, 2019

மோடி - போலிப் பிம்பத்தை துதிக்காதீர்
அருண் ஷோரியிடமிருந்து தலைப்பை மட்டும் இரவல் வாங்கிக் கொள்கிறேன்.

Worshiping of False Gods

இந்த புத்தகத்தை அவர் அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்த பயன்படுத்தி இருந்தார்.

ஆனால்  இன்று மோடியை ஒரு கடவுள் ரேஞ்சிற்கு எடுத்துப் போய் ரசித்து துதி பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

“ஆண்டவரே, தாங்கள் செய்வது என்னவென்று தெரியாது தவறிழைப்பவர்களை மன்னித்து விடுவாயாக”

என்று இரைஞ்சக் கூடிய அளவிற்கு அவர்கள் யாரும் தாங்கள் செய்வது என்னவென்றோ, அதன் விளைவுகள் என்னவென்றோ அறியாதவர்கள் அல்ல.

தெரிந்தே செய்கிற விஷமத்தனம் அது.

மோடி யார்?

நல்லவரா?
அறிவாளியா?
திறமையான நிர்வாகியா?
சிறந்த பேச்சாளரா?
ஜனநாயகவாதியா?
பொருளாதாரம் அறிந்தவரா?
தேச ஒற்றுமையை விரும்புபவரா?
தேச பக்தரா?
ஊழலற்றவரா?
எளிமையானவரா?
நேர்மையானவரா?

ஒவ்வொன்றாக பார்ப்போமோ

நல்லவர் ????

முதல்வராக இருந்த காலத்திலே ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர், அகதிகள் முகாமை குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை என்றவர், ஆயிரக் கணக்கானவர் மரணத்தை நாய்க்குட்டிகள் காரில் அடிபடுவதோடு ஒப்பிட்டவர், மாநிலத்தில் செல்வாக்கு குறைந்த நேரத்தில் எல்லாம் “உயிருக்கு ஆபத்து” என்ற பரபரப்பை உருவாக்கி போலி எண்கவுன்டர் நிகழ்த்தியவர், எதிராக செயல் பட்ட நீதிபதிக்கு மோட்சமும் ஆதரவாக செயல்பட்டவருக்கு “ஆளுனர்” என்ற சுகபோகமும் கொடுத்த இந்த உத்தமரை நல்லவர் என்றால் கெட்டவர்கள் கூட நம்ப மாட்டார்கள்.

அறிவாளி ????

போன நாடாளுமன்றத் தேர்தலின் போது இவர் அளித்த வரலாற்றுத் தகவல்கள், அறிவியலாளர் மாநாட்டில் இவர் அளித்த பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த ஆய்வறிக்கை ஆகியவை போதும் இவரது அறிவை பாராட்ட! ஜவஹர்லால் நேருவின் “கண்டறிந்த இந்தியா” நூலை படித்தவர்களுக்கு”மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு” என்றால் என்னவென்று  தெரியும் புரியும் . . .

படித்தவருக்கும் படிக்காத தற்குறிக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதும் கூட புரியும்.

பொருளாதாரம் அறிந்தவரா ????

கறுப்புப் பணம் என்றால் அதை உள்நாட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாகவும் ஐநூறு ரூபாய் நோட்டுக்களாகவும்தான் பதுக்கி வைத்திருப்பார்கள்  என்று நம்பக் கூடிய அளவிற்கு பொருளாதார ஞானம் உடையவர்.

ZERO BALANCE ACCOUNT  என்று குறைந்தபட்ச இருப்புத் தொகை கூட இல்லாமல் வங்கிக் கணக்குகளை துவக்க வைத்து பின்பு அந்த கணக்குகளிம் தன்மையை மாற்றி விட்டு குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கவில்லை என்று சொல்லி வாடிக்கையாளர் போடும் சொற்பத்தொகையைக் கூட அபராதம் என்ற பெயரில் சூறையாடி கோடிக்கணக்கில் குவிக்கத் தெரிந்த பொருளாதார நிபுணர்தான்.

கடனைத் திருப்பிக் கட்டாத  பெரு முதலாளிகள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓட அனுமதிக்கலாம், அவர்களின் கடனையெல்லாம் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டு வங்கிகளின் சுமையை அதிகப்படுத்தலாம் என்பதையும் கூட அறிந்து வைத்திருக்கிற  பொருளாதார மேதைதான்.

திறமையான நிர்வாகியா????

ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினால் போதும், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற அளவிற்கு நிர்வாக வித்தை தெரிந்தவர்.

சி.பி.ஐ, திட்டக்குழு, பல்கலைக்கழக மானியக் குழு, நீதிமன்றம், இந்திய அறிவியல் கழகம், இந்திய வரலாற்றுக் கழகம், இன்னும் ஏராளமான அனைத்து முக்கிய அமைப்புக்களையும் சீரழித்து, அவற்றின் செயல்பாட்டை நாசப்படுத்தியவர்.

முதலாளி அம்பானியின் ஜியோ கம்பெனி செழிப்பாக செயல்பட வேண்டுமென்றால் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அழித்தால் மட்டுமே முடியும் என்பதால் அதனை பட்டினி போட்டு கொல்லும் நிர்வாகத் திறன் கொண்டவர்.

வேலையின்மை தன்னுடைய ஆட்சிக்காலத்தில்தான் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து  விட்டது என்பது உலகிற்கு தெரியக் கூடாது என்பதற்காக அந்த அறிக்கையையே குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதை அறிந்துள்ள சாமர்த்தியமான நிர்வாகி.

சிறந்த பேச்சாளரா?

வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா, வளர்மதி ஆகியோரை சிறந்த பேச்சாளர்கள் என்று நீங்கள் ஒப்புக் கொண்டால் மோடியையும் ஒரு சிறந்த பேச்சாளர் என்றுதான் ஒப்புக் கொள்ள வேண்டும்.

எழுதிக் கொடுக்கப்பட்ட ஒரு பேச்சை டெலி ப்ராம்ப்டர் வழியாக பார்த்து படிப்பவர். MRS ANGELA MERKEL என்பதை எம்.ஆர்.எஸ் ஏஞ்செலா என்று படித்த காமெடியை எல்லாம் மறந்து விட முடியுமா?

அவரது உடல் மொழியைப் பற்றி சொல்வதை விட சொல்லாமல் இருப்பது மேல். அவ்வளவு மோசம்.

மற்ற அம்சங்களை பிறகு பார்ப்போம்.

3 comments:

 1. //வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா, வளர்மதி ஆகியோரை சிறந்த பேச்சாளர்கள் என்று நீங்கள் ஒப்புக் கொண்டால் மோடியையும் ஒரு சிறந்த பேச்சாளர் என்றுதான் ஒப்புக் கொள்ள வேண்டும்.// செம நக்கல்.

  ஆனால் அவர்கள் சொந்தமாக பேசக் கூடியவர்கள். எழுதி வைத்ததை படிப்பவர்கள் அல்ல. மோடி ?????

  ReplyDelete
 2. ஏன் RSS BJPஐ யாரும் தடை செய்யகூட கோரிக்கை வைக்க மறுக்க வேண்டும். இவர்கள் பயங்கரவாதிகள் என நூறு ஆதாரம் இருக்கிறது. CBI, RBI, banking, supreme Court, election Commission, army, என சிலவற்றையும் உடைத்து நாசம் செய்தும் தக்க தடை போடுவதை தவிர்ப்பது அவர்கள் குற்ற செயல்கள் அனைத்தும் நியாய படுத்தி விடுவதாக உள்ளது. பயப்படும் எதிர் கட்சிகள் ஏன் பயன்படுகிறஆர்கள் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இனி எதுவும் நடக்கும்.
  அமைதியான வாழ்க்கைக்கு இது நடத்த முடியாது. எலக்க்ஷன் எப்படி போனாலும் அதிகாரத்தை எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எலக்சன் நேர்மையாக நடக்க வாய்ப்பு குறைவு

  ReplyDelete
 3. நல்ல அலசல். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  ReplyDelete