Monday, April 15, 2019

நம்மை கேணையர்களாக்கி அலைய விட்ட . . .

நம்மை கேணயர்களாக்கி அலைய விட்ட அந்த தினங்களில் எழுதியவை 

ஞாபகம் வருதே 19

1000 = 800, மோடியால் உருவாகும் புதிய . . . . .
இது வேலூர் நிலவரம்.

ஆயிரம் ரூபாய் நோட்டென்றால் எண்ணூறு ரூபாய்,
ஐநூறு ரூபாய் நோட்டென்றால் நானூறு ரூபாய்.

இருபது சதவிகித கமிஷன் வாங்கிக் கொண்டு நோட்டுக்களை மாற்றும் புதிய தொழில் தொடங்கியுள்ளது.

மக்களின் அவசரத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேட்டையாட ஒரு கும்பல் புறப்பட்டுள்ளது.

வேலூரில் மட்டும் நடக்கக் கூடிய ஒன்றாக இருக்காது.

மதுரையில் நடப்பதாக தொலைக்காட்சியில் பார்த்ததாக ஒரு தோழர் சொன்னார். 

களவாணிகள் இந்தியா முழுதும்தானே இருக்கிறார்கள். என்ன கமிஷன் தொகை முன்னே, பின்னே இருக்கலாம்.

கருப்புப் பணத்தை அழிக்க என்ற பெயரில் சாமானிய மக்கள் மீது மோடி நடத்திய தாக்குதலின் முதல் விளைவு 

புதிய கருப்புப் பணத்தின் உருவாக்கம்.

மோடிக்கு ஜால்ரா அடித்தவர்கள் எல்லாம் எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளுங்கள்

ஞாபகம் வருதே 20

புது 2000 - இதுக்கா இப்படி??????
அரை நாள் விடுப்பெடுத்து வங்கியில் கால் நடுக்க நின்று மாற்றிக் கொண்டு வந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டை ஒரு தோழர் காட்டினார்.

அப்போது என் மனதில் தோன்றியதை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி ரொம்பவே அழகாக சொல்லியிருந்தார்.

 ஈசல் இறகைவிட 
மெல்லிசாக இருக்கிறது 
2000 ரூபாநோட்டு . 
இது நல்ல நோட்டா.?

இந்த நோட்டில்தான் மிக்ஸி இருக்கு கிரைண்டர் இருக்கு ஏ.சி இருக்கு என்றெல்லாம்  பாஜக காரர்கள் பில்ட் அப் கொடுத்தார்கள் என்பதைப் பார்க்கையில் அவர்கள் முட்டாள்களா இல்லை மக்களை முட்டாள்கள் என்று நினைத்தார்களா என்று தெரியவில்லை.

இவ்வளவு மெல்லிசாக இருப்பது பதுக்கல்காரர்களுக்கும் கருப்புப் பணத்தை பரிமாறும் அரசியல்வாதிகளுக்கும்தான் வசதி. 

ஞாபகம் வருதே 21

அமைதிப்படை அமாவாசை சொன்னது கரெக்ட்யா !!!அமைதிப்படையில் வரும் இந்த இந்த காட்சியைப் பாருங்கள் . அதிலும் முக்கியமாக மூன்றாவது நிமிடத்திலிருந்து எட்டாவது நிமிடம் வரை வரும் காட்சிகள்.சண்டை வந்தால் பழைய பிரச்சினைகள் மறைந்து போகும் என்பதுதான் இக்காட்சியின் செய்தி.சாமானிய மனிதன் மீதான மோடியின் துல்லியமான தாக்குதல்களைக் கண்டித்தும் பிரச்சினையின் தன்மையே புரியாமல் மோடியின் ஜால்ராக்கள் வைக்கும் அபத்தமான வாதங்களுக்கும் இடையிலான சண்டையில் எத்தனை விஷயங்கள் மறைந்து போயிருக்கிறது என்பதை பார்ப்போமா?

பற்றி எரியும் காஷ்மீர் பிரச்சினை,

உரி, பதான் கோட், பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல், தூதரக அதிகாரிகள் இரு தரப்பிலும் வெளியேற்றம்.காணாமல் போன ஜே.என்.யு மாணவன்,அங்கே நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையின் அராஜகம்பொது சிவில் சட்டத்தை திணிக்க முயற்சி

முன்னாள் ராணுவ வீரர் ஓய்வூதியம்

என்.டி. டிவிக்கான தடை

ராணுவ ரகசியத்தை விற்றதான வருண் காந்தி மீதான குற்றச்சாட்டு

காவிரி நதி நீர் நிர்வாக மேலாண்மை ஆணையம் 

போபால் போலி என்கவுன்டர்
முலாயம்சிங் யாதவ் குடும்ப மோதல்.

இவற்றை விட முக்கியமாக

அப்பல்லோவில் ஜெ .


அத்தனை பிரச்சினையும் மறைஞ்சு போச்சே...

மோடிடா, கேடிடா . . . .

2 comments:

  1. Write more, thats all I have to say. Literally, it seems as though you relied
    on the video to make your point. You definitely know what youre talking about, why waste your intelligence on just posting videos
    to your blog when you could be giving us something enlightening to read?

    ReplyDelete