Friday, April 12, 2019

மூன்று லட்சம் கோடி ஊழலுக்கு பதில் என்ன?


நேற்று காங்கிரஸ் கட்சி அமித் ஷா மீது சுமத்தியுள்ள புகார் சாதாரணமானதல்ல.

செல்லா நோட்டு விவகாரத்துக்கு முன்பாக அமித்ஷா வகையறாக்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வெளி நாட்டில் கள்ளத்தனமான அச்சடித்து இந்திய விமானப்படை மூலமாக கொண்டு வந்ததாகவும் பின்பு அதை ரிசர்வ் வங்கி மூலம் சட்டபூர்வமாக்கி, 15 முதல் 40 % வரை கமிஷன் வாங்கி பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுத்ததாகவும் இதில் மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை சுழன்றுள்ளது என்பது கபில் சிபல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வைத்த குற்றச்சாட்டு.

இது அபத்தம், கற்பனை, பொய் என்று கூட பாஜக இன்னும் பதில் சொல்லவில்லை.

இது உண்மை என்பதை நிரூபிக்கிற பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.

விமானப்படை, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என்பது தெரிய வேண்டும்.

அமித் ஷா கள்ள் நோட்டு அச்சடித்திருப்பாரா என்று தெரியாது. ஆனால் கமிஷனுக்கு நோட்டு மாற்றிக் கொடுத்திருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

அவரது மகன் க்ம்பெனி சொத்துக் கணக்குதான் அதற்கு ஆதாரம்.


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete