Tuesday, February 5, 2019

செங்கடலை திசை திருப்பும் தீதி மோடி நாடகம்



ரௌடி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் மம்தாவின் பிடியிலிருந்து  வங்கத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு இடதுசாரிக் கட்சிகள் கொல்கத்தாவில் ஒரு மாபெரும் பேரணிக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.

திரிணாமுல் குண்டர்களின் மிரட்டல், மம்தாவின் போலீஸ் (இந்த இடத்தில் சாமி விக்ரமின் டயலாக்கை பயன்படுத்திக் கொள்ளவும்) அரசு இயந்திர நெருக்கடி - இவற்றையெல்லாம் மீறி மக்கள் கொல்கத்தா நோக்கி திரள்கிறார்கள்.

மேற்கு வங்கத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் தோழர்கள் கொல்கத்தாவில் குவிந்து கொண்டே இருக்கிறார்கள். 

மோடியும் திரிணாமுல்லும் நடத்திய பேரணிகளை விட பல மடங்கு மக்கள் (இருபது லட்சம் என்று முதலாளித்துவ ஊடகங்களே ஒப்புக் கொண்டது) பங்கேற்பது கண்டு பதைபதைத்து போகிறது காவிக் கூட்டமும் தீதிக் கூட்டமும்.

2014 தேர்தலின் போது சாரதா சிட்பண்ட் ஊழலின் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி மக்களுக்கு அவர்களது பணத்தை திரும்பக் கொடுப்பேன் என்று ஜூம்லா வேலை செய்தார் மோடி.

சாரதா ஊழலின் பிரதான குற்றவாளி முகுல் ராய் தீதி கட்சியிலிருந்து மோடி கட்சிக்குச் சென்று அடைக்கலம் அடைந்ததும் மோடி இதுநாள் வரை சாரதா சிட்பண்ட் ஊழலின் எந்த ஆணி மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேற்கு வங்கத்தில் பீனிக்ஸ் பறவையாக இடதுசாரிகள் மீண்டும் உயிர்ப்போடு வருவதிலிருந்து இந்திய மக்களின் கவனத்தை திசை திருப்ப மோடி சி.பி.ஐ யை அனுப்ப, அவர்களை தீதி அடைத்து வைத்து போராட்ட நாடகத்தை துவக்க, 

இருபது லட்சம் தோழர்களின் பங்கேற்பாக கொல்கத்தா செங்கடலாக மாறிய செய்தி  பின்னுக்குப் போக தீதியின் நாடகம் முதல் பக்கத்திற்கு வந்து விட்டது.

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?

மோடி, தீதி - இருவருமே அராஜகப் பேர்வழிகள், ஜனநாயக விரோதிகள். 

இந்த கூட்டுக்களவானிகள் இருவருமே வீழ்த்தப்பட வேண்டியவர்கள்தான்.


4 comments:

  1. Thozhas come out of brahmins control first and then talk about workers. There is no difference between bhakthas (BJP) and thozhas (CPM).

    ReplyDelete
    Replies
    1. தோழர் என்ற வார்த்தையே ஜாதியற்றதுதான். கம்யூனிச எதிரிகளின் பொய்ப் பிரச்சாரம் அது

      Delete
    2. The brahmins in cpm are policy makers and raman like workers are bhakthas of cpm with no voice over the party. Janta dal party is under the hands of a brahmin guy suna samy. Congress inborn brahmins party, bjp die hard nrahmins party. First of all these parties comes out of brahmin control then we can speak about democracy.

      Delete
    3. அபத்தமான பொய்ப்பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் வாந்தி எடுக்க வேண்டாம். கம்யூனிஸ்டுகள் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். சிலர் பார்ப்பனர்களாக பிறந்திருக்கலாம். அது பிறப்பினால் நேரும் விபத்து. அவர்களின் நடவடிக்கைதான் முக்கியம். அப்படி எந்த ஒரு கம்யூனிஸ்டையும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்பவர்கள் மன நல நோயாளிகள்

      Delete