Sunday, July 8, 2018

இன்றைய அரெஸ்ட் யார்?



எட்டு வழிச்சாலை விவகாரத்தில் எடுபிடி அரசு மூர்க்கத்தனமாக நடந்து கொள்வது தொடர்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தாயிரம் கோடியில் பங்குத்தொகை என்பதை விட இன்னும் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது.

அதனால்தான் ஒவ்வொரு நாளும் ஏவல் துறை கொண்டு மக்கள் போராட்டங்களை அடக்க முயல்கிறது.

மேலே உள்ள படம் ஓவியர் திரு ரவி பாலேட் வரைந்தது.

சிறையில் அடைத்தாலும் போராட்டங்கள் ஓயப்போவதில்லை. கொள்ளையர் கூட்ட தலைவனாய் காட்சியளிக்கும் எடுபிடியார் அராஜகங்கள் போராட்டங்களை நீர்த்துப் போகாமல் மேலும் உறுதியோடு நடக்க தூண்டுதலாய்த்தான் அமையப் போகிறது. 

வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குச் செல்ல எடுபிடிக்கு ரொம்பவே அவசரம் போல . . .

1 comment: