Tuesday, July 3, 2018

போலீஸைப் பார்த்தா பயமா?

31,000 போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளேன் என்று  எடுபிடியார் வெட்டிப் பெருமை பேசினாலும் போராட்டங்கள் என்றால் அவரும் அவருடைய ஏவல் துறையும் உண்மையில் நடுங்கித்தான் போயிருக்கிறார்கள்.

அனுமதி கேட்டால் அதை மறுப்பதிலும் இழுத்தடிப்பதிலுமே ஏவல்துறை குறியாக இருக்கிறது.

எங்கள் தலைவர் தோழர் சரோஜ் அவர்களின் நினைவு நாளை ஒட்டி 18.06.2018 அன்று நீட் தேர்வு பற்றி பொது வெளியில் ஒரு தர்ணா நடத்த திட்டமிட்டிருந்தோம். பொதுப்பள்ளிக்கான தேசிய மேடையின் பொதுச்செயலாளர் தோழர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களை அழைத்திருந்தோம்.

நிகழ்ச்சிக்கு மூன்று நாள் வரை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்ததால் எங்கள் அலுவலக வளாகத்தில் திறந்த வெளி கருத்தரமாக மாற்றி விட்டோம். நிகழ்ச்சியில் நான் பேசிக் கொண்டிருக்கையில் தொடர்ச்சியாக தொலைபேசி வந்து கொண்டே இருந்தது.



பிறகு யார் என்று பார்த்தால் உதவி ஆய்வாளர். என்ன சார் தர்ணா நடத்தவில்லையா என்று கேட்கிறார். நீங்க அனுமதி தர இழுத்தடித்ததால் எங்கள் அலுவலகத்திலேயே நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னவுடன் போனை வைத்து விட்டார்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் நான்கு கான்ஸ்டபிள்கள் வந்து விட்டார்கள். அவர்களுக்கு நாற்காலியைப் போடச் சொன்னோம். என்ன பேசப்பட்டது என்று குறிப்பெடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

காவல்துறை அனுமதி மறுத்தால் நிகழ்ச்சியை ரத்து செய்து விடுவோம் என்று எதிர்பார்த்தார்களோ என்னமோ?

நேற்றைக்கு ரயில் மறியல் போராட்டத்தின் போதும் போலீஸை குவித்து வைத்திருந்தார்கள். காட்பாடி ரயில் நிலையத்திற்குள் எந்த வாகனமும் நுழைய முடியாதபடி தடுப்புக்கள் வேறு. உள்ளே செல்ல வேண்டும் என்ற பிறகு தடுப்பை நகர்த்தி வழியை உண்டாக்கினார்கள்.

அத்தனை போலீஸை குவித்ததால் யாரும் அஞ்சவில்லை. எழுச்சியாகவே மறியல் நடந்தது என்பதை புகைப்படங்களைப் பார்த்தால் புரியும்.











போராட்டக்காரர்கள் யாரும் போலீஸைப் பார்த்து பயப்படவில்லை. 

மாறாக அரசும் போலீஸும்தான் போராட்டக்காரர்களைப் பார்த்து பயப்படுகிறது என்பதே யதார்த்தம்.

வெட்டிப் பெருமை பேசுவதை எடுபிடியார் இனியாவது கைவிடட்டும். 


No comments:

Post a Comment