Saturday, July 7, 2018

எதை தின்று வந்தது மோடிக்கு அக்குணம்????


எதை சாப்பிட்டு வந்தது மோடியின் மிருக குணம்?



அசைவ உணவை அவர் தொட்டுப் பார்த்ததே கிடையாதாம்.

உபவாச காலங்களில் அவர் உணவையே தொட மாட்டாராம்.

அமெரிக்காவில் இருந்தாலும் கங்கை ஜலமும் பழச்சாறும் இந்தியாவிலிருந்தே சில கோடி ரூபாய் செலவில் செல்லும் அவர் உபவாச கால உணவாக.

மாட்டுக்கறி என்பது வெளிநாட்டு ஏற்றுமதிக்கான பொருள் மட்டுமே என்பதில் அவர் உறுதியாக இருப்பதால் அவர் அதை உண்பது பற்றி நினைக்கக் கூட மாட்டாராம்.

விரோத் கோலிக்கு சவால் விடுக்கும் உடற்கட்டைப் பெற்ற அவர் அதை நலனை பராமரிக்க வெளிநாட்டு காளானை மட்டுமே சாப்பிடுவாராம்.

அசைவத்தை நெருங்காத அந்த மோடிதான்

குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர்.

அவருக்கு அரசியல் நெருக்கடி வரும் போதெல்லாம் போலி எண்கவுண்டரில் உயிர்களை பறிப்பவர்.

கார்ப்பரேட் நலன்களுக்காக  ஏவல்துறையை துப்பாக்கியால் சுட வைப்பவர்.

ஒரு பைசா அளவிற்குக் கூட பயனில்லை என்று தெரிந்தும் கொண்டு வந்த செல்லா நோட்டு விவகாரத்தால் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்து போக காரணமாக இருந்தவர்.

இவற்றை விட வேறு எதை மிருகக் குணமென்று சொல்ல முடியும்?

அசைவம் சாப்பிடாத நரேந்திர மோடிக்கு வேறு எதை சாப்பிட்டு இந்த மிருக குணம் வந்தது என்பதை சொல்வீர்களா, "மாட்டுக்கறி சாப்பிட்டால் மிருக குணம் வரும் என்ற அறிவியல் கண்டுபிடிப்பி"ற்குச் சொந்தக்காரரான திரு சுகி.செல்வம் அவர்களே?

1 comment: