Thursday, August 15, 2013

இது உண்மையென்றால் நான் இந்திரா காந்தியை நிச்சயம் பாராட்டுவேன்

சற்று முன் முகநூலில் பார்த்த செய்தி இது.

இந்தத் தகவல்  உண்மையென்றால் நான் இந்திரா காந்தியை நிச்சயம் பாராட்டுவேன். 

ஆங்கிலேய ஆணவம்

ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து தற்போது சுதந்திரமாக இருக்கும் நாடுகளை ஆங்கிலத்தில் (commonwealth countries)காமன்வெல்த் நாடுகள் என்று கூறுவார்கள். இந்த காமன்வெல்த் தலைவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூடுவார்கள் (கூடி என்ன பேசுவார்கள் என்பது வேறு விஷயம், ஏதோ ஒரு நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாகும் என்பது தான் உண்மை!). 1975ம் ஆண்டு ஜமைகா நாட்டில் இந்த கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சென்றிருந்தார். இந்திராவை 'இரும்பு பெண் (Iron Lady) என்று அப்போதைய ஆங்கிலேய பத்திரிகைகள் பட்ட பெயர் வைத்திருந்தனர். இந்த பெயருக்கு ஏற்ப ஒரு சம்பவம் நடந்தது.

மாநாடு நடந்து முடிந்த அன்று இங்கிலாந்து ராணி எலிஸபெத்* எல்லா தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். ஆனால் முன்னாள் தலைவர்களெல்லாம் ஒரு காலத்தில் தனது நாட்டுக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்ற எண்ணம் எலிஸபெத் ராணிக்கு இருந்திருக்கும் போல. எல்லா தலைவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில் இருந்த வாக்கியம் என்னவென்றால் "Her Majesty will be pleased to grant an audience to you" என்று இருந்தது. அதாவது மற்ற தலைவர்கள் ஏதோ எலிஸபெத்தை பார்க்க நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இருப்பது போலவும் ராணியார் 'தரிசனம்' தருவதற்கு சம்மதிப்பது போலவும் அந்த கடிதத்தின் தொனி இருந்தது. சிறிய வயது முதலே இந்திரா நேருவின் சத்யாகிரஹ போராட்டத்தை அருகிலேயே பார்த்தவர். அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா? பதிலுக்கு தனது ஹோட்டல் அறையில் இருந்த ஒரு லெட்டர் பேடை கிழித்து "The Prime Minister of India will be pleased to meet you" (இந்திய பிரதமர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவார்) என்று எழுதி அனுப்பினார்.

மற்ற தலைவர்கள் மத்தியில் இது மிகவும் பரபரப்பாக
பேசப்பட்டது. தவறை உணர்ந்த எலிஸபெத், முதலில் எழுதிய கடிதத்தை வாபஸ் வாங்கி கொண்டு "Her Majesty will be pleased to meet you" என்று திருத்தி அனுப்பினார்.

அது மட்டுமல்ல, அதற்கு பிறகு நடந்த எல்லா காமன்வெல்த் மாநாடுகளிலும் எந்த நாட்டில் மாநாடு நடக்கிறதோ, அந்த நாட்டின் தலைவர்தான் மற்ற தலைவர்களூக்கு அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பித்தனர், எலிஸபெத் ராணி அல்ல*. 'ஒரு காலத்தில்
நாங்கள் உங்களுக்கு அடிமையாக இருந்தோம், இப்போது இல்லை' என்று சொல்லாமல் சொல்லி ஆங்கிலேயர்களின் ஆணவத்தை அடக்கிய* இந்த கடிதம் உண்மையில் சரித்திரம் படைத்து விட்டது என்றே கூறலாம் அல்லவா?

அன்சாரி முஹம்மது
படித்ததில் பிடித்தது


இப்படிப்பட்ட குணாம்சம் உங்களின் வாரிசுகளுக்கு ஏன் இல்லாமல்
போய்விட்டது இந்திராஜி?

8 comments:

  1. அரசியின் கணவரின் பல படிகள் மேலே போய்விட்டார். அவர் பொதுவில் உதிர்த்த்த முத்துக்கள் சில.


    1 After being told that Madonna was singing the Die Another Day theme in 2002: “Are we going to need ear plugs?”

    2 To a car park attendant who didn’t recognise him in 1997, he snapped: “You bloody silly fool!”

    3 To Simon Kelner, republican editor of The Independent, at Windsor Castle reception: “What are you doing here?” “I was invited, sir.” Philip: “Well, you didn’t have to come.”

    4 To female sea cadet last year: “Do you work in a strip club?”

    5 To expats in Abu Dhabi last year: “Are you running away from something?”

    6 After accepting a conservation award in Thailand in 1991: “Your country is one of the most notorious centres of trading in endangered species.”

    7 At a project to protect turtle doves in Anguilla in 1965, he said: “Cats kill far more birds than men. Why don’t you have a slogan: ‘Kill a cat and save a bird?’”

    8 To multi-ethnic Britain’s Got Talent 2009 winners Diversity: “Are you all one family?”
    Prince Phillip - Duke of Edinburgh with the Nigeria's President Olusegun Obasanjo (Pic: PA)
    9 To President of Nigeria, who was in national dress, 2003: “You look like you’re ready for bed!”

    10 His description of Beijing, during a visit there in 1986: “Ghastly.”

    11 At Hertfordshire University, 2003: “During the Blitz, a lot of shops had their windows blown in and put up notices saying, ‘More open than usual’. I now declare this place more open than usual.”

    12 To deaf children by steel band, 2000: “Deaf? If you’re near there, no wonder you are deaf.”

    13 To a tourist in Budapest in 1993: “You can’t have been here long, you haven’t got a pot belly.”

    14 To a British trekker in Papua New Guinea, 1998: “You managed not to get eaten then?”

    15 His verdict on Stoke-on-Trent, during a visit in 1997: “Ghastly.”

    16 To Atul Patel at reception for influential Indians, 2009: “There’s a lot of your family in tonight.”

    17 Peering at a fuse box in a Scottish factory, he said: “It looks as though it was put in by an Indian.” He later backtracked: “I meant to say cowboys.”

    ReplyDelete
  2. இந்தக் கதை நிச்சயமாக உண்மையாக இருக்கவே முடியாது. யாரோ ஒரு Indian Sycophant இயற்றி விட்ட கதை இது. காமராசர் தான் ஏழைகளுக்கு அடுப்பெரிக்க கருவேலமரத்தை அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்தார் என்ற மாதிரி தான் இந்தக் கதையும். :)

    இது உண்மையாக இருந்தால், இது இந்திராகாந்திக்கு இழுக்கே தவிர பெருமையல்ல. ஏனென்றால் அது இந்திராகாந்தியை, இது அவர் ஒரு Royal
    Protocol தெரியாத, ஆங்கிலம் புரியாத, துவேசம் பிடித்த முட்டாள் பெண் என்ற எண்ணத்தை மற்றவர்களில் மனதில் ஏற்படுத்தும் என்பதை இந்தக் கதையை இயற்றி விட்டவர் உணரவில்லை.

    இந்திரா காந்தி வெறும் சாமானிய பெண் அதாவது Commoner ஆனால் எலிசபெத் மாகராணி அரசி, a Royal. அதனால் அரச குடும்பத்தினருடன் எப்படி பழக வேண்டும் அவர்களை எப்படி அழைக்க வேண்டும் என்பதெற்கெல்லாம், ஆங்கில மொழியில் நடைமுறைகள் உண்டு. அதாவது royal protocol and etiquette தெரியாத தலைவியாக இந்திரா காந்தியை வெறும் கதைக்காகவேனும் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது.

    அரசி யாரையும் சந்திக்க சம்மதித்தால் அதை தமிழில் அரசியார் காட்சியளிக்க சம்மதித்தார் என்று சொல்வதில்லையா அது போல் தான் இதுவும்.
    ஆபிரிக்காவிலிருந்து ஒரு பிச்சைக்க்கார நாட்டின் அரசன் அமெரிக்காவுக்கு வந்தால் கூட, அமெரிக்க ஜனாதிபதி அவரைப் பார்த்து Your Majesty என்று விழித்து தான் பேச வேண்டும் அது தான் நடைமுறை. உதாரணமாக இளவரசி டயானா ஜப்பானுக்குப் போன போது ஜப்பானிய அரசரின் முன்னால் ஒற்றை முழங்காலில் இருந்து தனது வரவைத் தெரிவித்தார். ஏனென்றால் டயானா வெறும் இளவரசி, ஆனால் ஜப்பானிய அரசர் ஒரு சக்கரவர்த்தி. அதனால் ஏதும் அந்தஸ்து குறைந்து விடுவதாக யாரும் நினைப்பதில்லை. நிச்சயமாக இந்திரா காந்தியும் அப்படி நினைத்திருக்கவே மாட்டார். அவருக்கு royal protocol and etiquette உம் நிச்சயமாக தெரிந்திருக்கும். சின்னப்பையன் இளவரசர் ஹாரியைக் கூட கனேடியன் பிரதமர் Your Majesty என்று தான் கூற வேண்டும் அது தான் உலக வழக்கம்.

    “The Prime Minister of India will be pleased to meet you" என்றால் இந்திரா காந்தி, "Her Majesty அவருக்கு audience grant பண்ணியதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதாக Queen க்கு அறிவிப்பதாகத் தான் (சாதாரணமாக) கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர நீங்கள் கூறுவது போல் அல்ல என்பது எனது கருத்தாகும்.

    இந்திரா காந்தி இரும்புப்பெண் என்று பொதுநலவாய நாடுகளால் போற்றப்பட்டதரற்க்குக் காரணம் அவர் தென்னாபிரிக்க இனவெறிக்கெதிராக, அவர்களுக்கு ஆதரவாக இருந்த மார்கரெட் தட்ச்சருடன் நேரடியாக மோதிக்கொண்டதால் தான், ஆனால் இந்திரா காந்தியும் எலிசபெத் மகாராணியாரும் பரஸ்பரம் நல்ல மதிப்பும் பற்றுக் கொண்டிருந்தனர்.

    ReplyDelete
  3. இந்திரா அம்மையாரின் தைரியம்தான் உலகப்புகழ்பெற்றாதாச்சே!

    ReplyDelete
  4. //சின்னப்பையன் இளவரசர் ஹாரியைக் கூட கனேடியன் பிரதமர் Your Majesty //

    திருத்தம்: Your Royal Highness. :)

    ReplyDelete
  5. Meeting the Queen during her tour of Australia, the Australian Prime Minister’s wife had several times failed to curtsy, while the Prime Minister himself, on at least one occasion, had physically touched the Monarch, perhaps at more than one point.;-)

    ReplyDelete
  6. அரண்ம்னை வலைத்தளத்திற்கு சென்று பாருங்கள். அரசிக்கு கடிதம் எழுதுபவர்கள்
    எப்படி முடித்து கைய்யொப்பமிடவென்று
    பரிந்ததுரைக்கிறார்கள் என்று பாருங்கள்.
    இவர்கள் எந்தக் காலத்தில் இருக்கிறர்கள்!

    ReplyDelete
  7. மன்னர் மானியத்தை ஒழித்தவர் செய்தது
    மிகச் சரியானது

    ReplyDelete
  8. கோஷ்டி பூசலால் ஒரு மாநிலத்தின் நிர்வாகிகளையே (தமிழகம்) நியமிக்க முடியாதவர்களிடம் தைரியத்தை எதிர்பார்ப்பதில் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான். ஒரு மௌன சாமியாரை பிரதமராக தேர்ந்து எடுத்தவர்களிடம் இதை எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமாக தோன்றவில்லையா?...

    ReplyDelete