Sunday, August 18, 2013

புத்திசாலிகள் யார்? போட்டி முடிவுகள்

நேற்று நான் 15 பழமொழிகளுக்கான படங்களைப் போட்டு
அதற்கான விடைகளை கண்டு பிடிக்கச் சொல்லியிருந்தேன்.

இதோ படங்களும் அதற்கான விடைகளும்


1 நல்ல மாட்டிற்கு ஒரு சூடு,
2 ஆடற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடற பாட்டை பாடிக் கறக்கனும்
3 கல்லானாலும் கணவன், புல்லானாலும் கணவன்
4 அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5 மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி
6 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7 பாம்பின் கால் பாம்பறியும்


 8 அழுத புள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்
9  தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
10 வீட்டில எலி, வெளியில புலி
11 விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம்
12 ஏட்டுச்சுரைக்காய் கூட்டிற்கு உதவாது
13 தாய் எட்டடி பாய்ந்தா குட்டி பதினாறு அடி பாயும்
14 ஊர் இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15 பணம் பத்தும் செய்யும்.










கிட்டத்தட்ட முன்னூறு பேர் பார்த்த பதிவில் தைரியமாக
பதில் சொன்னவர்கள் எட்டு பேர். பின்னூட்டமாக மட்டும்
இல்லாமல் மின்னஞ்சல் மூலமாக, முகநூல் செய்தியாக
விடை சொன்னவர்களில் 

தோழர் கே.எம்.சாந்தலட்சுமி பதினான் கு விடைகளை 
சரியாகவும்

தோழர் என்.ராஜா பன்னிரெண்டு விடைகளையும்
தோழர் ராஜி பதினோரு விடைகளையும் 
தோழர் வசந்தராஜன், DYFI, பத்து விடைகளையும்

சரியாக  சொல்லியுள்ளனர்.

அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

முயற்சித்த மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அப்படியே பார்த்து விட்டுப் போனவர்களுக்கு

??????????????????????????????????????????????

 

4 comments:

  1. 2 நாளா நெட் பக்கம் வந்து வந்து பார்த்துட்டு போனேன். படிக்கும்போது கூட இப்படி சிந்திச்சதில்லை :-(

    ReplyDelete
  2. பணம் பத்தும் செய்யும் - Is wrong Answer!!!!

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று உங்கள் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/4_22.html?showComment=1377137237917#c1900917022381054794
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அன்பின் ராமன் - புதுமையான பதிவு - விடுகதை பொடுவது இயல்பு தான் - படம் போட்டு பழமொழி கேட்பது இப்போது தான் பார்க்கிறேன் - கேட்கிறேன்.

    அருமையான பழமொழிகளுக்கு தேடிப்பிடித்து இட்ட அருமையான படங்கள்

    வலைச்சர அறிமுகம் மூலமாக வந்து படித்து இரசித்து மகிழ்ந்து மருமொழியும் இட்டு விட்டேன்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete