Thursday, March 6, 2025

பன்றி இறைச்சியும் சிவராத்திரியும்

 


சிவராத்திரி அன்று அசைவ உணவு சாப்பிட்டவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்கிய நிகழ்ச்சி தொடர்பாக காலையில் எழுதியிருந்தேன்.

சிவராத்திரி அன்று அசைவம் சாப்பிடக்கூடாது என்று புதிய சட்டம் போடும் காவிக்கயவர்கள் மகாபாரதம் படித்திருப்பார்களா?

சிவனை நோக்கி தவம் இருந்த அர்ஜூனனின் தவத்தை ஒரு காட்டுப்பன்றி கெடுக்க அதை வேட்டையாடச் செல்கிறான். அப்போது ஒரு வேடனும் அந்த பன்றியை நோக்கி வருகிறான். இருவரும் அம்பு எய்கிறார்கள். பன்றி இறந்து போகிறது. அந்த பன்றியின் இறைச்சி யாருக்கு சொந்தம் என்று தகராறு வருகிறது. கட்டிப் பிரண்டு சண்டை போடுகிறார்கள். அர்ஜூனன் தோற்றுப் போக தன் வில்லால் அந்த வேடனை அடிக்க, அந்த அடி அவன் மேலும் படுகிறது. பிறகுதான் தெரிகிறது  அந்த வேடன் சிவபெருமான் என்று.

அர்ஜூனன் தவத்தை மெச்சி சிவபெருமான் கொடுத்த வரம்தான் “பாசுபதாஸ்திரம்” (ஆனால் அதை பயன்படுத்தியதாக தெரியவில்லை)

அப்படி அர்ஜூனன் வரம் வாங்கிய நாள் சிவராத்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமானே சிவராத்திரியன்று பன்றி இறைச்சிக்காக சண்டையிட்ட போது இந்த ஏ.பி,வி.பி குண்டர்கள் யார் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று சொல்ல?

பிகு: மேலே உள்ள கதையை  நான் படித்தது ராஜாஜி எழுதிய மகாபாரதம் நூலில்தான்.

புராணம் இதோடு முடியவில்லை. இன்னும் இருக்கிறது. அது பெரிய புராணம். 

 

Wednesday, March 5, 2025

புலிக்குக் கூட மாட்டுக்கறி தடை?

 


வட இந்தியாவில் நடந்த கூத்து இது. மகா சிவராத்திரியன்று அங்கே விலங்குகள் காட்சியகத்தில் இருந்த புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்தமைக்காக பாஜகவின் மாணவர் படை ரௌடிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.  இந்தியர்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று இது நாள் வரை கட்டுப்பாடுகள் விதித்த சங்கிகள் இப்போது மிருகங்களுக்கும் தங்கள் அராஜகத்தை விரிவு படுத்தியுள்ளனர்.

“புலி பசித்தாலும் புல்லை தின்னாது” என்ற பழமொழியெல்லாம் அவர்களுக்கு தெரியாது போல!  

புலிகளுக்கு இனிமேல் மாட்டுக்கறி மறுக்கப்பட்டால் அவை மனுசக் கறியை நோக்கி போய் விடப் போகிறது.


 

மேலே உள்ள செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்ட பதிவுதான் மேலே உள்ளது.

 பொறுப்பில்லாதவனாக இருந்திருந்தால் பதிவு மேலே உள்ள பத்தியோடு முடிந்திருக்கும். ஆனால் நான் அப்படி இல்லையே!

 மேலே உள்ள செய்தி சரியா என்று இணையத்தில் தீவிரமாக தேடினேன். அது ஏ.பி.வி.பி யை நக்கலடிக்க வெளியிடப்பட்ட செய்தி என்று தெரிந்து கொண்டேன்.

 ஏன் ஏ.பி.வி.பி யை நக்கலடிக்க வேண்டும்?

 புது டெல்லியில் உள்ள தென் ஆசிய பல்கலைக்கழக விடுதியில் உள்ள அசைவ உணவகத்தில் சிவராத்திரி அன்று அசைவ உணவு பறிமாறப்பட்டதற்காக ஏ.பி.வி.பி ரௌடிகள் உணவகத்தில் இருந்த மாணவ, மாணவியர், ஊழியர்களை தாக்கியுள்ளனர். அவர்கள் அசைவம் சாப்பிடுவதால் விரதம் இருப்பவர்கள் மனம் புண்படுகிறதாம்.

 அசைவ உணவகத்தில் அசைவ உணவு சாப்பிடுவதைக் கூட அனுமதிக்காமல் பொறுக்கித்தனம் செய்கிற ஏ.பி.வி.பி ரௌடிகள் நாளை புலிகளுக்குக் கூட புல்லை போடச்சொல்வார்கள் என்று நக்கலடிப்பதுதான் அந்த செய்தியின் அர்த்தம். . .

 இந்த உணவுக்கலாச்சாரக் கழிசடைகளுக்கு இரண்டு செய்திகளை சொல்ல வேண்டும். ஒன்று புராணம். இன்னொன்று காவிப் பொருளாதாரம்.

 அவை தொடரும்.

 

தமிழிசையின் வாழ்த்து சில்லறைத்தனமானது . . .

 


தமிழக முதல்வ மு,க.ஸ்டாலினுக்கு டமில்மூயூசிக் மும்மொழியில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் அவரது பிறந்த நாள் வாழ்த்து அமைந்துள்ளது.


எனக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கானா ஆளுனராக இருந்ததால் தமிழிசை குறைந்த காலத்தில் தெலுங்கு கற்றுக் கொண்டுள்ளார் என்று பெருந்தன்மையாக ஸ்டாலின் பதில் சொல்லியுள்ளார்.

தமிழிசையின் மும்மொழி வாழ்த்து பாஜகவின் மும்மொழி அரசியலை வெளிப்படுத்துகிறது என்று மேம்போக்காக கருதக் கூடாது.

ஸ்டாலினின் பூர்வீகம் ஆந்திரா என்று சங்கிகள் பல ஆண்டுகளாக கட்டமைத்துக் கொண்டிருக்கிற ஒரு கதையைத்தான் டமில்மூயூசிக் தெலுங்கு வாழ்த்தின் மூலம் சொல்லியுள்ளார். இது சில்லறைத்தனமான செயல். . . .


Tuesday, March 4, 2025

கவிஞர் நந்தலாலாவிற்கு செவ்வணக்கம்

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவரும் சிறப்பான உரை வீச்சால் பல மேடைகளை தன் வசப்படுத்தியவருமான தோழர் கவிஞர் நந்தலாலா இன்று இயற்கை எய்தியது மிகவும் வருத்தமளிக்கிறது.

அவரை முதலில் பார்த்தது 1998 ம் வருடம் இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு வேலூரில் நடைபெற்ற போதுதான். நெடுஞ்செழியன் என்ற பெயரில் வங்கி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் நந்தலாலா என்று தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் துவக்க மாநாட்டின் போது அறிவித்தார்.

அன்று மாலை வேலூர் கோட்டை மைதானத்தில் கலை இரவு நிகழ்ச்சி நடந்தது. அதிலே ஞான.ராஜசேகரன் இயக்கிய "ஒரு கண், ஒரு பார்வை" குறும்படம் திரையிடப்பட்டது. ஆசிரியர் ஒருவரின் ஜாதிய வெறியால் கண் பார்வையை இழந்த சேலம் தனம் என்ற சிறுமியின் கதை அது.

குறும்படத்தை தொடர்ந்து பேச வந்தார் தோழர் நந்தலாலா. ஒரு புதிய அனுபவமாக இருந்தது அவரது உரை. அவரை தொடர்ந்து பேசிய பாரதி கிருஷ்ணகுமாரின் உரை வீச்சும் அசத்தலாக இருக்க, எங்கள் கோட்டச்சங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒரு புதிய திறப்பு.

அந்த வருடம்தான் வேலூரைத்தாண்டி எங்கள் மாநாடு முதல் முறையாக புதுவையில் நடைபெற இருந்தது. பொது வெளியில் "மக்கள் ஒற்றுமை கலை விழா"  அப்போதிலிருந்து தொடங்கியது. அந்த நிகழ்வில் உரை வீச்சு நிகழ்த்திய தோழர் நந்தலாலா, அதன் பின்னும் பல வருடங்கள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருக்கோயிலூர், குடியாத்தம் என பல வருடங்கள் மக்கள் ஒற்றுமை கலை விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

குடியாத்தம் மாநாட்டிற்குப் பிறகு நீண்ட இடைவெளி. கடந்த 2024 ம் வருடம் திண்டிவனத்தில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை விழாவில் கலந்து கொண்டு "நடந்த கதை மறந்து விட்டாய், கேளடா கண்ணா" என்ற தலைப்பில் உரை வீச்சு நிகழ்த்தி சிரிக்க, சிந்திக்க வைத்தார்.




முன்னதாகவே வந்திருந்து எங்கள் தோழர்கள் வழங்கிய "மாட்டிக் கொண்ட மகாராஜா" நாடகத்தையும் ரசித்து பார்த்து தோழர்களையும் பாராட்டினார்.

அந்த மாநாடே எங்கள் கோட்டத்தில்  அவர் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சி என்று எதிர்பார்க்கவில்லை.

ஒரு திறமையான, அர்த்தபூர்வமாக பேசுகிற, சிந்தனைகளை தூண்டுகிற சிறந்த பேச்சாளரை தமிழ்நாடு இழந்து விட்டது.

செவ்வணக்கம் தோழர் கவிஞர் நந்தலாலா . . .

சீமான் -உச்ச நீதிமன்றம்- பழைய தீர்ப்பு



 சீமான் மீதான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம், சீமானுக்கு ஆதரவான நிலை எடுத்து கட்டப் பஞ்சாயத்து செய்யச் சொல்லியுள்ளது. மறைமுக சங்கியான சீமானுக்கு சாதகமான நிலை ஏற்பட்டதில் மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் ஆச்சர்யப்படவோ, அதிர்ச்சியடையவோ ஏதுமில்லை. இது போன்ற தீர்ப்பு புதிதுமல்ல.

2021 ம் ஆண்டு எழுதிய பதிவொன்றே அதற்கு சான்று

02, மார்ச், 2021 அன்று எழுதிய பதிவு கீழே

விவேக் தீர்ப்பே மேல் ஜட்ஜய்யா

 


 

மைனர் பெண்ணை பாலியல் கொடுமை செய்தவனுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை தருவதற்குப் பதிலாக அந்தப் பெண்ணுக்கு 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து கொண்டால் உதவ தயாராக இருப்பதாக கீழ் மட்டத்தில் இருக்கிற மாஜிஸ்டிரேட் சொன்னாலே அது மிகப் பெரிய அராஜகம். ஆலமரத்தடி கட்ட பஞ்சாயத்தை விட மோசமான ஒன்று.

  ஆனால் அதையே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே சொன்னால் கேட்பதற்கே அது எவ்வளவு நாராசமாக உள்ளது!

  ஒரு பாலியல் குற்றவாளிக்கு தலைமை நீதிபதி சட்டத்தை மீறி இரக்கம் காண்பிக்க வேண்டிய தேவை என்ன?

 


 மகாபாரதக் கதையே உங்களால் மாறி விடும் போல இருக்கே யுவர் ஆனர்!

  இப்படிப்பட்ட தீர்ப்பிற்கு விவேக் அளித்த தீர்ப்பே மேல் என்று சொல்ல வைத்து விட்டீர்களே யுவர் ஆனர்.

  ஒரு சின்ன டவுட் ஜட்ஜய்யா

  உங்களுக்கு முன்பாக தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயை பாலியல் புகாரில் விடுவித்ததால் மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கும் அதே சலுகையை காண்பிக்கிறீர்களோ?

 

Monday, March 3, 2025

டவுட்டா இருக்கே ஆரெஸெஸ்.ரெவி

 


காதலன் வில்லன் காகர்லா சத்யநாராயணா, தன்னால் கொல்லப்பட்டவர்களுக்கு காசியில்  தர்ப்பணம் கொடுக்கும் காட்சியை வைத்து மோடியும் இது போல யாருக்கு தர்ப்பணம் கொடுத்திருப்பார் என்று சில நாட்கள் முன்பு கேட்டிருந்தேன்.

யாருக்கு தர்ப்பணம் செய்தீர் மோடி ? என்ற பதிவின் இணைப்பு இது . . . 

 இப்போது ஆரெஸெஸ் ரெவியே காசியில் குளிக்கும் காட்சியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன்.

 காகர்லா சத்யநாராயணாவுக்கு கொஞ்சமும் சளைக்காத கிரிமினல் ஆரேஸெஸ்.ரெவி. இப்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை சீர்குலைக்கும் வகையில் பல கொலை, பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  356 பிரிவை பயன்படுத்தி தமிழ்நாட்டு அரசை கலைக்க வேண்டும் என்று வேறு சங்கிகள் பேசத் தொடங்கி விட்டனர்.

 அதனால் அதற்கு உதவ ரெவியே பல கிரிமினல் செயல்களை தூண்டி விட்டு அதற்கான பிராயசித்தமாக காசியில் தர்ப்பணம் செய்தாரோ என்று டவுட் வருகிறது. கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்று ஒரு சொலவடை இருப்பது நமக்கு தெரியும். கிரிமினல் வேலைகளை செய்து விட்டு தர்ப்பணம் செய்தால் அந்த பாவம் போய் விடும் என்று சனாதன தர்மத்தில் சொல்லியிருக்கிறதோ என்னவோ!

 பிகு: ஒரு வாரம் முன்னாடி எழுதின பதிவு.

 

Saturday, March 1, 2025

அந்த கலெக்டரை மாத்திட்டீங்க, மத்தவங்களை ?????

 

நேற்று தமிழக அரசு எடுத்த மிக முக்கியமான முடிவு இது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை அங்கிருந்து மாற்ற காரணம் கீழே உள்ளது.


பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பொறுப்பற்ற முறையில் பேசிய ஆட்சியரை பணி இடை நீக்கமே செய்திருக்க வேண்டும். சரி இது பரவாயில்லை.

ஆனால் இது போதுமா?

மாநில அரசு நிர்வாகத்தில் ஏராளமான காவி ஆடுகள் ஊடுறுவியுள்ளன. திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்,பி, சென்னை காவல்துறை அனுமதி கொடுத்த மாதர் சங்கப் பேரணிக்கு திண்டுக்கல் மாவட்டச் செயலாளரை செல்ல விடாமல் தடுத்து எம்.பி யின் காரையும் தடுத்த திண்டுக்கல் எஸ்.பி என பெரிய பட்டியலே உள்ளது.

அவர்களையும் களை எடுக்காவிட்டால் தமிழ்கத்தின் அமைதி வயல்களை அந்த காவியாடுகள் தின்று தீர்த்து விடும்.