காதல் திருமணங்கள் செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு வாருங்கள் என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் கூறிய பிறகு, ஆட்டுக்காரனும் பாஜக அலுவலகங்களுக்கும் வரலாம் என்று சொல்ல ஒரே கன்ப்யூசன்.
"போட்டிக்கு பிள்ளை பெறுகிறார்" என்றுதான் முதலில் நினைத்தேன். அந்தாள் பேசியதன் முழு விபரங்களை மாலை மலர் வெளியிட்டிருந்ததை வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் பகிர்ந்து கொண்டிருந்ததை படித்த பின்புதான் தெளிவு கிடைத்தது.
ஆக ஆட்டுக்காரன் காதலர்களை பாஜக அலுவலகத்திற்கு அழைப்பது திருமணம் செய்து வைக்க அல்ல. அப்பா அம்மாவிற்கும் போலீஸிற்கும் தகவல் கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்த.
அதெப்படி ஆட்டுக்காரன் காதல் திருமணங்களை எல்லாம் ஆதரிப்பான்! பிற்போக்குத்தனமான பாஜக ஆளுங்க எல்லாம் திருந்துவாங்களா என்ன!!
No comments:
Post a Comment