நேற்று உச்ச நீதிமன்றத்தில் கேவலமான நிகழ்வு ஒன்று நடந்தது. சிவம்சிங் என்றொரு வக்கீல் தலைமை நீதிபதி திரு கவாய் மீது காலணியை எரிந்துள்ளான்.
சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று சத்தம் போட்டுக் கொண்டே அந்த கேவலமான வேலையை செய்துள்ளான்.
கஜராஹூவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தலையில்லாத விஷ்ணு சிலையை சீரமைக்க வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்கையில் " நீங்கள் ஏன் விஷ்ணுவிடமே வேண்டிக் கொள்ளக் கூடாது" என்று சொன்னமைக்காகத்தான் இந்த கேவலத்தை நிகழ்த்தியுள்ளான்.
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மாற்றங்களை ஏன் செய்ய முடியாது என்று தனி பதிவாக எழுதுகிறேன்.
நீதித்துறையின் உச்ச பொறுப்பில் உள்ளவரை இழிவு படுத்தும் தைரியம் எங்கிருந்து வருகிறது?
சனாதனம்தான்.
நீதிபதி கவாய் அவர்களின் சமூகப் பின்னணி காரணமாக அவரை சங்கிகள் பார்க்கும் பார்வை மோசமாகத்தான் இருக்கிறது. அந்த பார்வையை தருவது சனாதனம்தான்.
இந்த நிகழ்வுக்காக இந்தியர்கள் அனைவரும் கோபமடைந்துள்ளார்கள் என்று மோடி முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.
உண்மையாகவே இந்தியாவை நேசிக்கிற, அரசியல் சாசனத்தின் விழுமியங்களை மதிக்கிற இந்தியர்கள் இச்சம்பவம் குறித்து கோபமடைந்துள்ளனர்.
ஆனால் கண்டிப்பாக சங்கிகள் கிடையாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சில சங்கிகளின் அரிய, உயரிய கருத்துக்கள் இங்கே . . .
இப்போ சொல்லுங்க மோடி, நெசமாவே உங்களுக்கு கோபமா? மனசுக்குள்ள சந்தோஷமாத்தானே இருந்தது.
நெசத்தை சொல்லுங்க . . .
No comments:
Post a Comment