Monday, October 13, 2025

முழுசாவே சினிமாக்கு போயிடுங்க சு.கோ

 


நாடாளுமன்றத்துக்குப் போன சுரேஷ் கோபி மந்திரி பதவியை ராஜினாமா செய்யப் போகிறாராம். அதற்கான காரணம் என்ன சொல்லியுள்ளார்.


சினிமாவில் நடிக்காததால் வருமானம் நின்று விட்டதால் பணம் வேண்டும் என்பதற்காக மீண்டும் நடிக்க விரும்புவதாகவும் அதற்கு தடையாக உள்ளதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சொல்லியுள்ளார்.

நல்லது.

நீங்கள் அமைச்சராக இருந்து எதுவும் கிழிக்கவில்லை. மோடியே எதுவும் கிழிக்காத போது உங்களால் மட்டும் என்ன கிழிக்க முடியும்!

என்ன சினிமாவில் நடிக்கப் போய் விட்டால் நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கும் போக முடியாது. அண்புமணிக்கு போட்டியாக உங்கள் வருகைப் பதிவும் இருக்கும்.

அதனால் எம்.பி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள்.

திருச்சூருக்கு ஒரு நல்ல எம்.பி கிடைக்கலாம்,

No comments:

Post a Comment