Thursday, February 2, 2023

ரசிகரென்றாலும் நியாயம் வேண்டாமா?

 





இன்று ஒரு குழுவில் பார்த்த பதிவு.

 


வீர பாண்டிய கட்டபொம்மனை நம் கண் முன்னே நிறுத்தியவர் நடிகர் திலகம்தான் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கட்டபொம்மன் என்றால் சிவாஜி கணேசன் நினைவுதான் முதலில் வரும். அந்த அளவிற்கு அந்த பாத்திரமாகவே அவர் வாழ்ந்திருந்தார்.

 

ஆனாலும் வீர பாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளுக்குக் கூட நான் நடிகர் திலகத்திற்குத்தான் நான் வாழ்த்து சொல்வேன் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

 

ஒரு நடிகராய் ரசிகராய் பார்ப்பதிலிருந்து அடுத்த கட்டமாக வழிபாட்டு மன நிலைக்குப் போவதன் அடையாளம் இதுதான்.

 

இந்த நாயக வழிபாடுதான் திரைக்கு வருபவர்கள் எல்லோருக்கும் முதலமைச்சர் கனவை வேறு கொடுத்து விடுகின்றது.

 

பிகு : மேலே உள்ளது வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலடப்பட்ட கயத்தாறில் அமைக்கப்பட்ட  கட்டபொம்மன் சிலை. இதை அமைத்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான்.

1 comment:

  1. ஒரு சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலுக்கு நண்பருடன் சென்றிருந்தேன். (நண்பர் தீவிர சிவாஜி ரசிகர் ) கோவிலுக்கு வெளியே ராஜராஜ சோழன் பதாகை கட்டியிருந்தது. நண்பர் சிவாஜியின் படம் போட்ட பதாகை கட்டியியிருந்தால் அழகாக இருந்திருக்கும் என்று சொன்னது ஞாபகம் வருகிறது.

    ReplyDelete