Friday, February 3, 2023

அமிர்த காலத்தின் ஆலகால விஷம்

மோடியின் ஆட்சிக்காலத்தை அமிர்த காலம் என்று வர்ணிக்கிறார்கள்.  அமிர்த காலத்தின் அற்புத பட்ஜெட் என்று வேறு வர்ணிக்கிறார்கள்.

புராணக்கதைகளின் படி பாற்கடலை கடையும் போது கிடைக்கிற அமிர்தத்தை தேவர்கள் அசுரர்களை  ஏமாற்றி கொண்டு போய் விடுவார்கள்/ முதலில் வந்த ஆலகால விஷத்தை பரம சிவன் பருகினார், அது தொண்டைக்கு உள்ளே பயணிக்காமல் பார்வதி தடுத்ததாகவும் கதை செல்லும். இந்த பட்ஜெட்டும் பணக்காரர்களுக்கு அமிர்தத்தையும் சாமானிய மக்களுக்கு ஆலகால விஷத்தையும் கொடுத்துள்ளது என்பதை பேராசியர் ஜெயதி கோஷ் அவர்களின் பதிவை படித்தால் புரியும்.





 *நாளொரு கேள்வி: 02.02.2023*

தொடர் எண்: *978*
இன்று நம்மோடு பொருளாதார நிபுணர் *ஜெயதி கோஷ்*
#########################
*அமிர்த காலத்தில் நுழைகிறதா தேசம்!*
கேள்வி: இந்தியா ஒளிமயமாக எழுந்து அமிர்த காலத்தில் நுழைய தயாராய் உள்ளதாக, நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். உண்மைதானா?...
*ஜெயதி கோஷ்*
இந்தியாவின் பட்ஜெட்டை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே நேற்றைய தினம் நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
உக்ரைன் போர், பணவீக்கம் மற்றும் கோவிட்டுக்கு பிந்தைய பொருளாதார மந்தநிலை நீடித்து வருகிற சூழலில்,
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், உள்நாட்டுச் சந்தையை பெரிய அளவிற்கு அதிகரித்திட வேண்டும், அதற்கு வரிவிதிப்பு மற்றும் பொதுச் செலவினம் ஆகியவற்றை தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் வருமானம் அளிக்கக் கூடிய விதத்திலும், அதன் மூலம் அவர்கள் தங்கள் தேவைகளை விரிவாக்கிக் கொள்வதற்கும், அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், அவர்கள் தங்கள் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லக்கூடிய விதத்தில் பட்ஜெட் அமையும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பட்ஜெட்டில் அதற்கு நேர் எதிராக இருந்தது.
# அமைப்பு சாரா துறைகளின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
# வேளாண்துறைக்கு நிதி குறைப்பு
# மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்திற்கு நிதி குறைப்பு
# பொது சுகாதாரத்துறைக்கு உரிய நிதி இல்லை
# கல்வித் துறைக்க்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை.
# உணவு பொருட்கள் மீதான மானியங்கள் மூன்றில் ஒரு பங்காக குறைப்பு
# இன்ஷூரன்ஸ் மற்றும் விவசாய பாதுகாப்பிற்கு ஒதுக்கீடு குறைப்பு...
ஆகிய அம்சங்களே இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
உதாரணமாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான *MNREGA* திட்டத்திற்கு நிதி மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டு, வெறும் *60,000 கோடியாக* அறிவிக்கப்பட்டுள்ளது. நூறு நாட்களுக்கான வேலைக்கு தேவைப்படும் நிதி
ரூ. 2,72,000 யாக கணக்கிடப்பட்டிருந்த நிலையில், வெறும் 60,000 கோடி மட்டும் ஒதுக்கியிருப்பது இந்த அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
அதேபோல், கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீடு *ரூ.63,449 கோடி.* இது சென்ற ஆண்டைவிட *ரூ.5,356 கோடி அதிகம்* என்று ஆரவாரமாக அறிவித்த நிதியமைச்சர், சென்ற நிதி ஆண்டில் விழுந்த துண்டான *ரூ. 4,396 கோடியை* கணக்கில் எடுத்துக் கொள்ளாமலே பேசுகிறார் . அதை கணக்கில் எடுத்து கொண்டால் *உண்மையில் கிடைக்கும் நிதி வெறும் ரூ.960 கோடி கூடுதல் தொகையே* ஆகும். பணவீக்கம் காரணமாக உண்மையான நிதி சென்ற ஆண்டைவிட குறைவு தான் என்பதை மறுக்க இயலாது.
எனவே இந்த பட்ஜெட் யாருக்கானது என்பது தெளிவாக தெரிய வருகிறது.
இந்திய மக்கள் தாங்கள் இவ்வாறு மீண்டும் முட்டாளாக்கப் படுவதை விரும்புவார்களா ?
*செவ்வானம்*

No comments:

Post a Comment