Thursday, February 2, 2023

மோடி பெயரை மாற்றினாலும்




 

மோடிக்கும் மொட்டைச்சாமியாருக்கும் பிடித்தமான ஒரு பைத்தியக்காரத்தன்மான பொழுது போக்கு பெயரை மாற்றுவது.

 

இவர்கள் பெயரை மாற்றும் போதெல்லாம் ஒரு திரைப்படத்தில் நாகேஷிடம் அவர் நண்பர் “என் நாய் செத்துப் போச்சுப்பா, அதுக்கு பெயரெல்லாம் வைச்சேன்” என்று சொல்ல “பெயர் வைச்சியே நாயே, சோறு வைச்சியா” என்று சொல்லும் காட்சி நினைவுக்கு வந்து விடும்.

 

பெயர் மாற்றும் பைத்தியக்கார நடவடிக்கையில் லேட்டஸ்ட் நடவடிக்கை, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள “முகல் கார்டன்” என்ற தோட்டத்திற்கு “அம்ரித் உத்யான்” என்று பெயர் மாற்றியதுதான்.

 

அந்த தோட்டம்  முகலாயர்கள் உருவாக்கியதல்ல. பின் ஏன் அந்த பெயர்?

 

அத்தோட்டத்தை உருவாக்கிய ஐரோப்பிய கட்டிடக் கலை நிபுணர் அதனை முகலாயர்களின் பாணியில் உருவாக்கி முகல் கார்டன் என்று அவரே பெயர் சூட்டினார். இந்த சம்பவம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கவில்லை. பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப்பட்டட்து. வைசிராய் மாளிகைதான் குடியரசுத்தலைவர் மாளிகையானது.

 

பெயரை மாற்றி விட்டதால் முகல் கார்டன் என்ற பெயர் மக்கள் மனதிலிருந்து மறந்து விடுமா அல்லது அத்தோட்டம், முகலாயர் பாணி தோட்டம் என்ற உண்மையை மறைத்து விடத்தான் முடியுமா?

 

பிரயாக்ராஜ் என்று ஒரு முக்கிய நகரின் பெயரை மொட்டைச்சாமியார் என்று மாற்றினாலும் மக்கள் சொல்வது என்னமோ அலகாபாத் என்றுதான்.

 

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் முன்பு  புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் புகை வண்டி நிலையம் என்று பெயர் மாற்றினாலும் மக்கள் இன்னும் சென்னை சென்ட்ரல் என்றுதான் அழைக்கிறார்கள்.

 

பெயர் மாற்றத்தின் காரணம் வெறும் வெறுப்பரசியல். 

No comments:

Post a Comment