Wednesday, February 24, 2021

கொண்டையையாவது மறைங்க மத்யமரே!

 



“தோற்றுப் போனவர்கள் கவிழ்த்தனர் ஆட்சியை” என்ற பதிவை நேற்று வலைப்பக்கத்தில் பதிவு செய்து விட்டு “மத்யமர்” முக நூல் குழுவிலும் பதிவிட்டேன். ரொம்ப நேரம் வரை வெளியிடப்படவே இல்லை.

 மத்யமர் குழுவில் இன்சூரன்ஸ் துறை தொடர்பான பதிவுகள் தவிர வேறு எதையும் பதிவிட்டதில்லை. அதிலும் கூட முக்கியமான ஒரு பதிவு எல்லோரும் தூங்கப் போன பின்பு இரவு 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 


ஆனால் இந்த பதிவை “பகிர்வு பதிவு என்பதால் நிராகரிக்கப்படுகிறது என்றும் உங்களுடையதுதான் என்றால் ஆதாரத்துடன் சமர்ப்பிக்கவும்”என்று சொல்லியிருந்தார்கள்.

 யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை சொந்த பதிவு என்று சொல்லி ஏமாற்றுபவனா என்று கோபம் வந்து விட்டது. மற்றவர்கள் பதிவை எப்போது பகிர்ந்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்லாமல் பகிர்ந்ததே கிடையாது.

 இது நானே, நானேதான் எழுதியது என்று சொல்லி மறுபடியும் பதிவிட்ட பின்பு பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.



 ஜனநாயகப் படுகொலை என்ற வார்த்தையையும் படத்தையும் அகற்றி விட்டு மறுபடியும் பதியவும் என்று வந்தது.

 ஜனநாயகப் படுகொலை என்ற வார்த்தையை அகற்றி நானும் ஒரு ஜனநாயகப் படுகொலை செய்ய விரும்பாததால் மீண்டும் பதிவிடவில்லை.

 பெரும்பாலும் மோடியை உயர்த்திப் பிடிக்கும் பதிவுகளே மத்யமர் குழுவில் இடம் பிடிக்கும்.  திமுகவை 200 ரூபாய் உபிக்கள், திருட்டு திமுக, கலைஞரை கட்டுமரம், தந்தை பெரியாரை சொறியான், மு,க,ஸ்டாலினை சுடலை என்றெல்லாம் அழைக்கும் பதிவுகளுக்கெல்லாம் தாராளமாக அனுமதி தருபவர்களுக்கு ஜனநாயக படுகொலை என்ற உண்மை மட்டும் கசக்கிறது.

 இன்று கூட டில்ஷா ரவிக்கு பிணை கொடுக்கப்பட்டது குறித்த பதிவை நீண்ட நேரத்திற்குப் பிறகு அதே போன்ற பதிவை இன்னொருவரும் போட்ட பின்பு வெளியிட்டார்கள்.

 பாஜக ஆதரவு முகநூல் குழு என்று வெளிப்படையாக சொல்லி விட்டால் நேர்மையாக இருக்குமே. அதை விடுத்து வேறு காரணங்களை ஏன் சொல்ல வேண்டும்!

 ஆனால் அவர்களால் பாஜக ஆதரவு கொண்டையை மறைக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். இப்பதிவை எழுத நான் காரணமே இந்த குழுவின் நோக்கம் பற்றிய கொள்கை விளக்கம்தான்..  இரு விதமான அணுகுமுறை கையாளப்படுகிறது என்பதற்கு திமுகவினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளுக்கும் வலதுசாரிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளுக்குமான வேறுபாடுகளளே சான்று.  

 




இதில் சொல்லப்பட்டது போல அப்படி ஒன்றும் வலதுசாரிகள் ப்ளாக் செய்யப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம். விவசாயிகள் மசோதா குறித்து பல விளக்கங்களை ஆதாரத்துடன் எழுதி வந்த ஒருவர் நீக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. இந்த குழுவில் இணைந்தது நம் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கு மட்டுமல்ல, பாஜகவினர் எப்படியெல்லாம் மூளைச்சலவை செய்யப் பட்டுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்வதற்காகத்தான். தொடர்வதும் அதற்காகத்தான்.

 

 

1 comment:

  1. நிறைய இடங்களில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது.திடீரென ஒரு வாட்ஸ்அப் குருப் ஆரம்பிப்பார்கள்.அதில் நம்மையும் இணைத்து கொள்வார்கள்.நல்லாதான் போயிட்டு இருக்கும்.திடீரென ஒருநாள் மோடியையும் பிஜேபிஐயும் புகழ்ந்து போட ஆரம்பிப்பார்கள்.நாம் அதை விமர்சித்து பதிவு போட்டால் போதும் உடனே சம்மந்தமே இல்லாமல் கம்யுனிஸ்ட்கள் திமுக காங்கிரஸ் திக பெரியார் ஆகியோர் குறித்து கடுமையான விமர்சனங்களை பல பேர் போடுவார்கள் இது இப்போது வழக்கமான நடைமுறையாகிவிட்டது.

    ReplyDelete