Wednesday, February 17, 2021

நியாயமும் அறிவும் இருந்தால்??????

 ப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் பதிவு. பொருத்தமான படம் மட்டும் என்னுடையது.



டூல்கிட்

டூல்கிட் என்பது ஒரு பிரசுரம் போன்றதுதான். ஒரு போராட்டம் எதற்காக நடக்கிறது அதற்கு ஆதரவாக என்ன செய்யலாம் போன்ற விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் ஆவணம் இது. அரேபிய வசந்தம், 1990களில் நடந்த லத்தீன் அமெரிக்க புரட்சிகள் போன்ற இயக்கங்களை ஒருங்கிணைக்க டூல்கிட் பயன்படுத்தப் பட்டது. இது ஒரு நவீன தகவல் தொடர்பு சாதனம்.

மெக்கானிக்குகளிடமும், நம் கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் இருக்கும் பழுது பார்க்கும் கருவிகளின் பையான டூல்கிட் என்பலிருந்துதான் இந்தச் சொல் உருவாக்கப் பட்டுள்ளது.

விரைவாகத் தகவல் பரவ உதவும் ஒரு கருவி. தன் பக்கம் நியாயம் இருந்தால் அரசாங்கம் கூட இதைத் திறமையாகப் பயன் படுத்தலாம்.

நியாயமும் திறமையும் இருந்தால்தானே என்று கேட்கிறீர்களா?

அதுவும் நியாயம்தான்....

No comments:

Post a Comment