Tuesday, May 7, 2019

பொய்யும் மோடியும் பந்தமோ பந்தம். . .






பிரிக்க முடியாதது புலமையும் வறுமையும் என்பது திருவிளையாடல் வசனம்.

அதனை “மோடியும் பொய்யும்” என்று மாற்றி எழுத வேண்டும்.
அந்த அளவிற்கு பிரிக்க முடியாத பிரிக்க முடியாத பந்தம் அது.

ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை என்று ஒன்று உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை நடத்தும் மருத்துவமனை அது.

“ஆயுஷ் மான்” அட்டை வைத்திருந்த ஒரு நோயாளி அந்த மருத்துவமனைக்குச் சென்ற போது,

இது மோடி ஆஸ்பத்திரியோ, யோகி ஆஸ்பத்திரியோ கிடையாது, ராகுல் ஆஸ்பத்திரி, இந்த அட்டையெல்லாம் இங்கே செல்லுபடி ஆகாது என்று சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்கள். அந்த நோயாளி இறந்து போய் விட்டார்.

பாரீர் இந்த கொடுமையை”

என்று அவர் பேசியுள்ளார்.

மத்தியரசு கொண்டு வரும் நல்ல திட்டமான ஆயுஷ்மான் திட்டத்தை அந்த மருத்துவமனை நிராகரித்து நோயாளிகளை சாக விடுகிறது என்பது அவரின் குற்றச்சாட்டு.

இதே குற்றச்சாட்டை அமேதி பாஜக வேட்பாளரும் சத்தியசந்தர், “டிகிரி டு ப்ளஸ் டூ” புகழ் ஸ்மிர்தி இராணி அம்மையாரும் கூறியுள்ளார். அரசியலுக்காக எந்த அளவு தரம் தாழ்ந்து விட்டார் பாருங்கள் என்பது அவர் குற்றச்சாட்டு.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

அந்த நோயாளி அந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓவர் குடி காரணமாக குடல் பாதிக்கப்பட்டு வந்தவருக்கு சிகிச்சை கொடுத்துள்ளார்கள். மேல் சிகிச்சைக்காக லக்னோ செல்ல அறிவுறுத்தி உள்ளார்கள். அதற்கு முன்பாக மூச்சு திணறல் வந்துள்ளது. அதற்கும் CPR  என்ற முறைப்படி சிகிச்சை அளித்துள்ளார்கள். ஆனாலும் அவர் இறந்து போய் விட்டார்.

ஆக அனுமதிக்காமல் சாக விட்டார்கள் என்பது முதல் பொய்.

ஆயுஷ்மான் திட்ட,ம் அறிமுகமானதற்குப் பிறகு அதன் படு இருநூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம் என்றும் அந்த மருத்துவமனை ஆணித்தரமாக கூறியுள்ளது.

ஆயுஷ்மான் அட்டையெல்லாம் செல்லுபடி ஆகாது என்று கூறினார்கள் என்று சொன்னது இரண்டாவது பொய்.

பொய் பேசாமால் மோடியால் வாழ முடியாது போல . . .

ஆமாம்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஆக்ஸிஜன் வழங்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை மொட்டைச்சாமியார் சாக விட்டது மோடிக்கு நினைவில் இருக்குமோ !

3 comments:

  1. உண்மைதான், பொய்பேசாமல் இருக்கமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete