Monday, May 20, 2019

டெல்லியை மறந்துட்டீங்களா மீடியாஸ்?



இந்திய ஊடகங்கள் வாங்கிய காசுக்கு விசுவாசமாக நன்றாகவே வாலாட்டியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பாஜகவிற்கு சாதகமான ஒரு கருத்துத் திணிப்பை நிகழ்த்தி உள்ளது. யார் வந்தால் தங்களுக்கு நல்லதோ, அவர்களே வரப் போவதாய் மக்கள் சொன்னதாய் ஒரு நாடகம் நடத்தியுள்ளன.

ஆனால் பாவம் இந்திய ஊடகங்கள்!

கடந்த ஐந்தாண்டுகளில் அவர்களின் ஆரூடம் எதுவும் பலிக்கவே இல்லை.

கர்னாடகாவில் பாஜக பெரும்பான்மை பெறும் என்றது. அதிக எண்ணிக்கை பெற்றதே தவிர குதிரை பேரம் நடத்தியும் கூட பெரும்பான்மைக் கோட்டை நெருங்க முடியவில்லை.

பீகாரிலும் பாஜகவின் வெற்றிக் கொடி பறக்கும் என்றது. மகா கூட்டணியின் கொடி பறக்க காவிக் கொடி கிழிந்து தொங்கியது. அங்கே சி.பி.ஐ மூலம் காய் நகர்த்தி நிதிஷ் குமாரோடு ஒட்டிக் கொண்டது ஒரு வெட்கம் கெட்ட செயல்.

சமீபத்தில் முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் கூட மண்ணைக் கவ்வியது பாஜக மட்டுமல்ல, அங்கே எல்லாம் அவர்களுக்கே வெற்றி என்று கூவிய ஊடகங்களுக்கும்தான். 

இவை அனைத்தையும் விட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களை மறக்க முடியுமா?

பாஜகவிற்கே வெற்றி என்ற ஊடகங்களின் கொக்கரிப்பிற்கு அம்மக்கள் பலத்த அடி கொடுத்து வாயை மூட வைத்தார்கள்.

வரலாற்றை மறக்கும் போது அது மீண்டும் நிகழ்ந்தே தீரும் என்பது விதி. ஊடகங்களுக்கு வரலாறு மீண்டும் பாடம் கற்றுக் கொடுக்கும். 


3 comments:

  1. Let us wait and see....Get ready for reason either way....Yes you need to write more on this blog

    ReplyDelete
  2. 2 நாளில் எல்லாம் தெரிஞ்சிடும்
    இப்பவே ரெடி ஆகுங்க
    பாஜக தோத்தா என்ன காரணம் சொல்லி பதிவு எழுதணும் என்றும் , பாஜக வென்றால் என்ன காரணம் என்று பதிவு எழுதணும் என்றும் இப்பவே எழுதி வைச்சிடுங்க

    முடிவு வந்ததும் அதிர்ச்சியில் ஒன்னும் தோணாது . அப்புறம் பதிவே எழுத முடியாது

    ReplyDelete
    Replies
    1. தம்பி, இதெல்லாம் என் கிட்ட சொல்லாதே,
      சொந்தமா, சுவாரஸ்யமா, சுருக்கமா, அர்த்தமுள்ளதா எழுதத் தெரியாம கடையை மூடிட்டுப் போன சில அதி மேதாவிங்க, ஒரு நூறு வாட்ஸப் க்ரூப்பில இருந்துகிட்டு, ஒரு க்ரூப்பில வரதை இன்னொரு க்ரூப்பில பார்வர்ட் செஞ்சு தன்னை பெரிய புத்திசாலி மாதிரி சீன் போடுவாங்க, அவங்க கிட்ட போய் சொல்லு.

      Delete