Monday, May 6, 2019

மூவர் சிலை அங்கே இருப்பது அவமானமே




தைலாபுரம் தோட்டத்தை ஒவ்வொரு முறையும் கடக்கும் போதும் நெஞ்சில் முள்ளாய் தைக்கிற ஒரு விஷயம் உண்டு.

தைலாபுரம் தோட்டத்தின் வாசலில்

பேராசான் மார்க்ஸ்
அண்ணல் அம்பேத்கர்
தந்தை பெரியார்

ஆகியோர்

 மார்பளவு சிலைகளாக காட்சியளித்துக் கொண்டிருப்பதுதான் அது.

இந்த மூவரும் போற்றப்பட வேண்டியவர்கள், பின்பற்றப்பட வேண்டியவர்கள்.

ஆனால் இவர்களின் சிலைகள் இருப்பதற்கான சரியான இடமா தைலாபுரம் தோட்டம்?

எங்கள் கட்சியின் கொள்கைகளை வடிவமைப்பதற்கு வித்திட்டவர் காரல் மார்க்ஸ் என்று மேற்று சின்ன டாக்டர் அடித்து விட்டுள்ளார்.

எந்த ஒரு கட்சியின் நடவடிக்கைகளும் அதன் கொள்கையின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும்.

பாமகவின் நடவடிக்கைகள் என்ன?

ஜாதிய உணர்வுகளை தூண்டுவது,
ஜாதியின் அடிப்படையில் கலவரங்களை நிகழ்த்துவது,
தலித் மக்களுக்கு எதிராக வெறுப்பை நெருப்பாய் பரப்புவது,
தலித் மக்களின் குடிசைகளை கொளுத்துவது.
தலித் மக்களின் ஓட்டு வீடுகளை இடிப்பது,
மரம் வெட்டி பாதிப்பை உருவாக்குவது
ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக செயல்படுவது,
ஜீன்ஸ், கூலிங் க்ளாஸிற்கு மயங்குபவர்க்கள் என தன் சமுதாயப் பெண்களையே இழிவுபடுத்துவது,
தேர்தலுக்கு முன்பு யாருக்கு எதிராக மிகவும் கடுமையாக பொங்கிக் கொண்டிருந்தார்களோ, கடுமையாக திட்டினார்களோ  அவர்களுடனேயே அரசியல் ஆதாயத்திற்காக அணி சேர்ப்பது.
பதவிக்கு வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று அளந்து விட்டதைப் பற்றி வாய் திறக்காமலேயே இருப்பது.
பதவியைப் பயன்படுத்தி கோடிகளில் கொள்ளையடிப்பது.

எந்த கொள்கையின் அடிப்படையில் பாமக வின் மேற்கண்ட நடவடிக்கைகள் நடைபெறுகிறது?

அப்படிப்பட்ட கொள்கைகளுக்கும்

மார்க்ஸிற்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் ‘’

ஏதாவது தொடர்பு உள்ளதா?

பொதுவுடமைக்கும்
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்கும்
சமூக நீதிக்கும் பெண்கள் விடுதலைக்கும் பகுத்தறிவுக்கும்

பாமகவிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?

இல்லை, இல்லை, இல்லை

பிறகு எதற்கு அவர்களின் சிலைகள் அங்கே இருக்க வேண்டும்?

டாக்டர்கள் இத்தலைவர்களை மதிப்பதாக இருந்தால் தங்கள் வீட்டு வாசலில் ஏதோ துவாரகபாலர்கள் போல இருக்கிற சிலைகளை அகற்றி விடட்டும்.

பி.கு
இரண்டாண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் சென்று விட்டு கடலூர், புதுவை, திண்டிவனம் வழியாக வேலூர் திரும்புகையில் இந்த புகைப்படத்தை எடுத்த தோழர் சி.கணேசனுக்கு நன்றி


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete