Sunday, May 12, 2019

இந்திய செல்லூரார் மோடி பற்றி . . .





பாலகோட் விமான தாக்குதலின் போது அன்றைய தினம் இரவு சுமார் 9-9.30 மணிவாக்கில் நான் தாக்குதல் குறித்து ஆராய்ந்தேன். அதே ஆய்வை மீண்டு இரவு 12 மணிக்கு மேல் செய்ய நேரிட்டது. இதற்கு அப்போது வானிலையில் ஏற்பட்ட மாறுதலே காரணம் ஆகும். அதன் பிறகு நான் சில நிமிடம் யோசித்தேன். எனது மனதில் இது நடக்குமா அல்லது நடக்காதா என்னும் கேள்வி எழுந்திருந்தது. தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த தாக்குதலை வேறு ஒரு தினத்தன்று மாற்றலாம் என யோசனை அளித்தனர். ஆனால் உடனடியாக நடத்தாவிடில் இந்த ரகசியம் எப்படியும் வெளியாகி விடும் என எனக்கு தோன்றியது. நான் விஞ்ஞானம் படிக்காதவன். இருந்தாலும் மேகங்கள் இருப்பதாலும் கனமழை பெய்வதாலும் ராடாரால் நமது விமானங்களை கண்டறிய முடியாது என்பதை நான் அறிவேன். இந்த மழை மற்றும் மேக மூட்டம் நமக்கு நன்மை தரும் என்பதையும் நான் தீர்மானம் செய்து விட்டேன். அதனால் நான் அன்றே பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்த உகந்த நாள் என முடிவு செய்தேன். அதனல் மேகங்கள் சூழ்ந்துள்ளன. கிளம்புங்கள் என உத்தரவிட்டேன். அவர்களும் கிளம்பினார்கள்.

என்று சொன்ன இந்திய அளவிலான செல்லூரார் மோடியின் அறிவியல் கண்டுபிடிப்பு, ராணுவ தொழில் நுட்பம் குறித்து
சமூக வலைத்தளங்களில் சொல்லப்பட்ட சில விஷயங்களை மட்டும் இன்று பகிர்ந்து கொள்கிறேன். 

மேலும் சில நாளை.


பெரும்பாலானவை ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து சுடப்பட்டவை





புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்த அந்த இரவு. அறையில் காதைக் கிழிக்கும் அமைதி. கூடியிருந்த இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்தனர். அவர்கள் யாருக்கும் எப்படி எதிர்த்தாக்குதல் நடத்துவது என்று குழப்பம். அவரோ அமைதியாக அந்த நீண்ட அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும், கூரைக்கும் தரைக்குமிடையே குதித்துக் கொண்டுமிருந்தார். ‘மேகமூட்டாமாயிருக்கிறது, மழை தூறுகிறது. எப்படி நம் விமானங்கள் தாக்குதல் நடத்த முடியும் என்று தெரியவில்லை” என்று அங்கிருந்த அதிகாரி
ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவரது மைண்ட் வாய்ஸைக் கேட்டு அவரை நோக்கித் திரும்பினார் தலைவர். “அதுதாம் நம் யுக்தியே... எதிரிகளின் ராடார் மேகங்களயும் ஊடுருவி நம் விமானாங்களைக் கண்டறிய முடியாது. அப்போது போட்டுத் தாக்கி விடலாம்,” என்றார் தலைவர். உடனே அறையில் ஆரவாரம். 

ராடார்கள் மேகத்தையும் தாண்டி பொருட்களைக் காண முடியும்
என்று அறிந்திருந்தவர்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டே கை தட்டினர்.

படத்தின் பெயர்: பாலகோட்டில் மோடி (பெய்ரூட்டில் ஜானி போல)



வாட்ஸாப்பில் வந்தது: (சில ஓட்டுவேலைகளுடன்)

ஐஎஸ்ஆர்ஓ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போது இதை நிறவேற்றலாம் என்று குழப்பம். என்னிடம் வந்தார்கள். நான் உடனே பவுர்ணமி அன்று அனுப்பினால் உடனடியாக நிலவை அடையலாம் என்றவுடன் துள்ளிக் குதித்தனர். 
—- ஐடியா அமாவாசை


இன்று சமூக வலைத்தளங்கள் முழுவதும் மோடி வறுவல்தான். பலருடைய நகைச்சுவை உணர்வைக் கிளறி விட்டிருக்கிறார் தலைவர்.

இன்னுமொரு சாம்பிள்:
எல்லை கடந்து போர்விமானங்கள் செல்லும்போது ரிவர்ஸ் கியர் போடச் சொன்னேன். விமானங்கள் அவர்களை நோக்கி வருகின்றனவா இல்லை எதிர் திசையில் போகின்றனவா என்று எதிரிகள் குழம்பி விடுவார்கள் என்றேன். (சுற்றிலுமிருந்தவர்கள் மோடி மோடி மோடி என்று கோஷமிட்டு கும்மியடித்தனர்)



4 comments:

  1. படித்தேன் பதிவினை சிரிப்பு தாங்கல...

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ஏண்டா, இதுக்கே இப்படி டென்ஷன் ஆயிட்டயே.
      இன்னும் ரெண்டு பதிவு இருக்கு.

      மேகம் இருந்தா ரேடாரில தெரியாது. நமக்கு சாதகம்னு
      சொன்ன அந்த வீடியோவை நானும் பாத்து தொலைச்சேன்.

      பாவம்டா நீங்க!

      மோடி எனும் முட்டாளுக்கு எவ்வளவுதான் முட்டுக் கொடுப்பீங்க.
      அந்தாளுக்கு அறிவில்லை. உங்களுக்கும் அறிவில்லை.

      சரி, சரி
      உன் பிறப்பு ரகசியம், நீ என்ன புரோக்கர் தொழில் பார்க்கறே,
      உன்னை தெருவில விட்டு செருப்பால அடிச்ச கதை
      இதெல்லாம் எனக்கு அனாவசியம்

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete