Thursday, May 2, 2019

இதுதாண்டா மோடி கேரக்டர் ...இது மோடிக்கு புதுசு இல்லீங்க!

திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் நாற்பது எம்.எல். க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்த பின்பு அவர்கள் உங்கள் கட்சியை கைவிட்டு விட்டு என்னோடு வந்து விடுவார்கள்

இது மோடி மம்தா பானர்ஜிக்கு வெளிப்படையாக விடுத்துள்ள மிரட்டல்.

அப்பட்டமான குதிரை பேரம் இது என்று பலரும் மோடியை கண்டித்துள்ளனர்.

இச்செய்தியில் அதிர்ச்சியடையவோ, ஆச்சர்யமடையவோ ஏதுமில்லை.

வழக்கமாக பாஜக செய்து கொண்டிருக்கிற தில்லுமுல்லு வேலைகளில் இதுவும் ஒன்று.

ஏதாவது மோசடி செய்து தேர்தலில் ஜெயிக்கப் பார்ப்பது,

அது முடியவில்லை என்றால் ஆளுனர் மூலம் ஆட்சி அமைப்பது.

அப்படியும் முடியவில்லை என்றால் வேறு கட்சி எம்.எல். க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வருவது.

ஆளும் கட்சி கூட்டணியை உடைத்து அங்கே போய் உட்கார்ந்து கொள்வது.

ஆளும் கட்சியை அடிமையாக்கி தன் ஆட்சியை நடத்துவது

கோவா, மணிப்பூர், உத்தர்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, கர்னாடகம், பீகார், தமிழகம்

என்று பல மாநிலங்களில் மேலே சொல்லப்பட்ட அனைத்து மோசடிகளையும் பாஜக செய்துள்ளது.

திரிபுராவில் காங்கிரஸ் கட்சி எம்.எல். க்களை ஹோல்சேல் விலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் வாங்கியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த காங்கிரஸ் எம்.எல். க்களை அப்படியே வாரிச் சுருட்டிக் கொண்டது பாஜக.

கோவாவில் மனோகர் பாரிக்கர் இறந்த பிறகு எம்.ஜி.பி கட்சியின் மூன்று எம்.எல். க்களில் இரண்டு பேரை பாஜகவிற்கு தாவ வைத்து மந்திரி, துணை முதல்வர் பதவிகளும் கொடுத்தது.

நிதிஷ்குமார், லாலு கூட்டணியை உடைத்து லாலு இடத்திற்குச் சென்று பாஜக ஒட்டிக் கொண்ட கதை நடந்தது பீகாரில்.

தமிழக அனுபவத்தைச் சொல்லவே வேண்டாம்.

கர்னாடகாவில் மட்டும்தான் இவர்களின் குதிரை பேர சதி வெற்றி பெறவில்லை.

இதுவரை தாங்கள் செய்து வந்த குதிரை பேர விவகாரங்கள் பற்றி வெளிப்படையாக பீற்றிக் கொண்டதில்லை.

மேற்கு வங்கத்தில் முதல் முறையாக வாய் விட்டு சொல்லி விட்டார் மோடி. அவ்வளவுதான்.

மோடியோ, பாஜகவோ நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே அதிர்ச்சி அடைவத்ற்கோ அல்லது  ஆச்சர்யமடைவதற்கோ வாய்ப்பு கிடைக்கும்.

அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்காமல் மோடி பார்த்துக் கொள்வார்.\

ஏனென்றால் இதுதான் மோடியின் கேரக்டர். 
பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,

11 comments:

 1. இப்பவே கதறல் பலமாகயிருக்கே .. உண்டியல்ஸ் 23 ஆம் திகதி தீக்குளிப்பார்கள் போல் உள்ளதே

  காங்கிரஸ் அல்லது பிஜேபி யார் வென்றாலும் எனக்கு மகிழ்ச்சி
  ஆனால் கம்யூனிஸ்ட் வெல்லவே கூடாது

  ReplyDelete
  Replies
  1. மோடி போன்ற புரோக்கர்களுக்கு வால் பிடிக்கிற உங்களைப் போன்ற அறிவிலிகள்தான் தீக்குளிக்க வேண்டும். கேடு கெட்ட பாஜகவை ஆதரிக்கும் வெட்கம் கெட்டவர்கள் செத்தால் தவறில்லை

   Delete
  2. நாங்க என்ன கதறி கிட்டா இருக்கோம்
   சிரிச்சுக்கிட்டு இருக்கோம்
   மோடி வென்றாலும் மகிழ்ச்சி
   ராகுல் வென்றாலும் மகிழ்ச்சி

   எங்களுக்கு துக்கத்தை தர கூடிய உண்டீஸ் எங்கேயேயும் வெல்ல வாய்ப்பில்லை
   மம்தா திதி வஙகத்தில் போட்டு தாக்குறாங்களாம்
   அடி தூள் பறக்குதாம்

   அப்போ அங்கே கூட வாய்ப்பில்லை
   கேரளாவில் கொஞ்சம் வாய்ப்புண்டு
   அவ்வளவுதான் உண்டீஸ்
   கேரளாவும் ஒருநாள் முழுமையாக காங்கிரஸ் வசமாகும்
   அந்நாள் திருநாள் /

   Delete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. உண்டி சார்
  நான் ஒரு வலது சாரி
  எனக்கும் மோடியும் பிடிக்கும்
  ராகுலும் பிடிக்கும்
  இரண்டு பேரும் என் கொள்கை உடையவர்கள்

  என்னை வசைபாடும் நீங்க
  எதுக்கு வலது சாரி ராகுலுக்கு தமிழ்நாட்டில் வால் பிடிக்குறீங்க
  கேரளாவில் எதுக்குறீங்க

  ReplyDelete
 4. இரண்டு பேருக்கும் புரோக்கர் வேலை பார்க்கற உங்களை விட
  உண்டியல் குலுக்கறது பெட்டர்.

  ஆமாம் உண்டியல் கேவலம் என்றால் திருப்பதியில எதுக்கு அவ்ளோ
  பெரிய உண்டியல்?

  கேரளாவில எதுக்கு கம்யூனிஸ்டை எதுக்கறீங்கன்னு காங்கிரஸ் ஆளுங்களை கேட்டு பதில் வாங்கிட்டு வாங்க. நானும் பதில் சொல்றேன்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கூட நாங்க கூட்டணி வைக்கல
   நம்ம கூட்டணி யில் கம்யூக்கள் ஒட்டிக்கிட்டு இருக்காங்க என்று காங்கிரஸ் காரங்க சொல்லுறாங்க

   Delete
  2. நல்லா ஜோக்கடிக்கறீங்க!
   "ராகுலையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும்"
   என்பதுதான் நீங்க அடிச்சதலயே பெரிய ஜோக்.

   ஆமாம். அந்த திருப்பதி உண்டியல் பற்றி ஒன்னுமே சொல்லலியே?

   Delete
 5. யாருப்பா அது?
  ராகுலையும் பிடிக்குமாம்,
  மோடியையும் பிடிக்குமாம்,
  அக்னி நட்சத்திரமே நாளைக்குதானே ஆரம்பிக்குது. அதுக்குள்ள கழண்டு போச்சா?

  ReplyDelete
 6. Mr.Anonymous முதல்ல உங்க அடையாளத்த சொல்லுங்க... அடையாளத்தை மறைத்து பேசுறவன் ஆம்பளையும் இல்லை, பொம்பளையும் இல்லை... மூன்றாம் பாலினமும் இல்லை... மொத்தத்துல மனிதப் பிறவியே இல்லை...

  ReplyDelete
  Replies
  1. தோழர், இவர்கள் எல்லாம் அடையாளம் மறைக்கும் கோழைகள்.
   வெட்கம் கெட்டவர்கள்.

   Delete