Wednesday, April 5, 2017

இந்தி தெரியாவிட்டால் ?? குடி முழுகாது . . .

இந்தி தெரியாவிட்டால் தமிழகத்தை தாண்டினால் வாழ்வே கிடையாது என்பது போல பாஜககாரர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்று வட கிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சென்றுள்ளேன். சங்க வேலையாக, சொந்த வேலையாக, சுற்றுலாப்பயணியாக இந்த பயணங்கள் அமைந்திருக்கிறது. தோழர்களோடோ, குடும்பத்தோடோ அல்லது தனியாகவோ இந்த பயணங்கள் அமைந்திருக்கின்றன.

எனக்கு இந்தி தெரியாது. ஆனாலும் எந்த ஒரு பயணத்திலும் எந்த ஒரு சிக்கலும் இந்தி தெரியாத காரணத்தால் வந்ததில்லை. பொருட்களை பேரம் பேசி வாங்கக் கூட மொழி ஒரு தடையாக இருந்ததில்லை.

இந்தி தெரியாதவர்கள் தமிழ்நாட்டைத் தாண்டினால் திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டவர்கள் போல தவிப்பார்கள் என்பதெல்லாம் வெறும் உடான்ஸ். பல்வேறு வட மாநிலங்களுக்கு பல முறை சென்ற அனுபவத்தில் சொல்கிறேன். இந்தி தெரியாமலும் சமாளிக்கலாம்.

இப்படி எல்லாம் அச்சுறுத்தியாவது இந்தியை திணிக்க வேண்டும் என்று பாஜக முயன்றால் அது பரிதாபமாக தோற்றுப் போகும்.

நான் என்ன மொழி பேச வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் என்னுடைய உரிமை. அதில் தலையிட, கட்டளையிட மோடி வகையற்றாக்களுக்கு எல்லாம் அதிகாரம் கிடையாது.

ஒரு மொழியை நானாக விரும்பிக் கற்பதற்கும் இதை கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று அரசு கட்டளையிடுவதற்கும் உள்ள வேறுபாட்டை பலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இந்தி தெரிந்தால்தான் வேலை கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்பவர்கள் யாரும் “பீகாரிலிருந்தும் உத்தர பிரதேசத்திலும் கட்டுமான வேலைகளுக்காக பல லட்சம் உழைப்பாளி மக்கள் ஏன் இடம் பெயர்கின்றனர் என்ற கேள்விக்கு என்றைக்காவது பதில் சொல்லியுள்ளனரா?

வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் தங்களின் உறவினர்களோடு வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றனர். யாரும் தமிழ் கற்றுக் கொண்டு அதன் பின்பு வேலூருக்கு புறப்படுவதில்லை. தமிழ் தெரியாமல் வேலூரில் அவர்களால் எப்படி சமாளிக்க முடியுமோ, அது போல இந்தி இல்லாமல் நம்மாலும் சமாளிக்க முடியும். 

இந்தியை திணிக்கும் முயற்சி காலம் காலமாக நடந்து கொண்டே இருக்கிறது.

அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியைத் திணிப்பதற்கென்றே ஒரு பிரிவு உள்ளது. Official Language Implementation என்ற பெயரில் பல கட்டளைகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும். அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பல படிவங்கள் இந்தியிலும் அச்சடிக்கப்பட வேண்டும் என்ற அபத்தமான உத்தரவுகள் வரும்.  இந்தி திவஸ் என்று கொண்டாட வேண்டும், இப்படி பலவற்றை சொல்ல முடியும். என்ன தமிழகத்தில் அவையெல்லாம் அமலாகாது. அதே நேரம் அந்த உத்தரவுகள் எல்லாம் அமலாகிறதா என்று கண்காணிக்க எம்.பிக்கள் குழுக்கள் கூட உண்டு. ஜாலியாக  அவர்கள் ஊர் சுற்றும் ஏற்பாடு இது.

அரசுத்துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மட்டும்தான் இந்த கெடுபிடி. தனியார் நிறுவனங்களுக்கு கட்டளை போடும் தைரியம் எந்த ஆட்சியாளருக்கு, எந்த காலத்தில் இருந்திருக்கிறது?

மைல்கல்லில் திணிப்பது தெரிகிறது. அதனால் எதிர்ப்பு வலுவாகிறது. 

மைல்கல்லில் இந்திக்கு எதிராக கருப்பு மை பூசுபவர்கள் தங்கள் முகத்தில் பூசிக் கொள்ளட்டும் என்கிறார் பொராகி.

வாக்களிக்கும் போது இடது கை பெரு விரலில் வைத்த மையை ஏற்கனவே எங்கள் முகத்தில் பூசி விட்டீர்களே பொன்னார் அவர்களே! மேலும் மை பூச எங்கே இடமிருக்கிறது? 

மைல்கல்லில் பூசும் மையை பூச வேண்டிய சரியான இடம் உங்கள் முகம்தான்.

10 comments:

 1. விளக்கம் நன்று
  விருப்பமிருந்தால் ஹிந்தி மட்டுமல்ல குஜராத்தி கூட படிக்கலாம் கட்டாயமாக திணிப்பது சர்வாதிகாரம்.

  ReplyDelete
 2. 1965 -ல் இந்தி திணிப்பு போராட்டம் நினைவுக்கு வருகிறது. இன்னும் அதை தொடர்கதை ஆக்க வேண்டாம். அப்போது நாங்கள் அப்பாவிகள். இப்போதைய இளைஞர் கூட்டம் உலகம் அறிந்தவர்கள் நண்பரே..மீண்டும் கூப்பாடு எதற்கு? ?வேறு நாடு முன்னேற வேண்டிய வேலையை பாரும். ஸ்ரீநாத்.

  ReplyDelete
  Replies
  1. ஆட்சியாளர்கள் மாற மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்களே சார். அதுதான் பிரச்சினை. நாட்டை முன்னேற்றுவதை விட்டு விட்டு இந்தியை முன்னேற்றுவதில் அக்கறை காண்பிக்கிறார்களே!

   Delete
 3. இந்தி கட்டாயமாக்குவதால் நம்டிமை மையாக்குவது எளிது. என்ன தேவையோ அதை செய்யாமல் இந்துத்துவா கொள்கையை தலையில் ஏற்றிக்கொண்டு ஆடுவது இந்த நாட்டிற்கு சனி பிடித்துவிட்டது. சின்ன நாடு சிங்கப்பூரை பார்க்கும்போது இவர்களை காட்டுமிராண்டிகளாகத்தான் பார்க்க முடிகிறது

  ReplyDelete
 4. இந்தி கட்டாயமாக்குவதால் நம்மை அடிமையாக்குவது எளிது. என்ன தேவையோ அதை செய்யாமல் இந்துத்துவா கொள்கையை தலையில் ஏற்றிக்கொண்டு ஆடுவது இந்த நாட்டிற்கு சனி பிடித்துவிட்டது. சின்ன நாடு சிங்கப்பூரை பார்க்கும்போது இவர்களை காட்டுமிராண்டிகளாகத்தான் பார்க்க முடிகிறது

  ReplyDelete
 5. Like English, Hindi also a foreign language to tamil peoples. For the tamil peoples in srilanga, hindi is a foreign language and for the tamil people in india sinhalese is foreign language. Even we are struggling to learn English so learning one more language is unnecessary burden to students. I request those tamil people who born for hindiwalas (whether legal or illegal) to ask their fellow hindi people to learn English so that we can communicate with each other not only in india but also in abroad. Hindi is never going to my mother tongue but there is a possibility to make hindi is the mother tongue of my son by marrying an illiterate girl from hindi heart land. So my next generation will become illustrate and my tamilnadu become under-developed state like uttar pradesh and rejasthan.

  ReplyDelete
 6. முதல்ல ஹிந்தி பேசற ஸ்டேட்ல ஆங்கில மீடியம் பள்ளியை மூட சொல்லவேண்டும். அப்படி மூடிட்டு அப்புறம் இங்க வரட்டும்.

  ReplyDelete
 7. எவருக்குமே தன் தாய்மொழியை தவிர வேறு மேலதிக பாஷைகள் கற்று கொள்வதால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை, நன்மைகளை தவிர, அதுவும் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் அறிந்த ஹிந்தியையை கற்பதினால்.
  எனது நிறுவனம் சீன பாஷை கட்டாயமாக கற்று கொள்ள வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டால் மகிழ்ச்சியுடன் கற்று கொள்வேன்.
  தங்களது தாய்மொழியாக ஒரு உயர்ந்த கிளாசிக்கல் பாஷையை கொண்டவர்கள்,
  ஆனால் அந்த பாஷையில் பேசவும், எழுதவும் வெட்கபடுபவர்கள்,அவமானமாக கருதுபவர்கள்,
  ஆங்கிலத்தை தமது தாய்மொழியாக ஏற்று கொள்ளதாயாராக இருப்பவர்கள், உலகில் யார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

  ReplyDelete
 8. எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி படிப்பதில் தவறில்லை.ஆனால் திணிப்பதுதான் தவறானது .இலங்கையில் கூட தமிழர் போரட்டத்துக்கு மூல காரணம் மொழி .எந்த ஒரு இனக்குழுமமும் தனது மொழியை இழந்தால் தமது தனித்துவத்தை இழந்து விடுவார்கள்.போதாததற்கு தமிழனுக்கு ஒரு சொந்த நாடு கூட இல்லை.என்னதான் தமிழன் ஆங்கிலத்தினை தூக்கி பிடித்தாலும் ஆங்கிலேயர் ஆக முடியாது .

  ReplyDelete
 9. இன்னிக்கு ஹிந்தி கத்துக்க சொல்விங்க. நாளைக்கு ஹிந்திதான் தேசிய மொழி. எல்லா எக்ஸாமும் ஹிந்திலதான்னு சொல்விங்க. ஹிந்தி படிச்சாலும், படிக்காட்டாலும், நம்ப மதராசிதான்.

  ReplyDelete