Saturday, April 8, 2017

கவண் - தோற்ற சபதம்
நேற்று கவண் சென்றிருந்தோம். ட்ங்கல் திரைப்படத்திற்குப் பிறகு பார்த்த படம்.

பாஸிட்டிவான விஷயங்கள்.

முதலாளித்துவ தொலைக்காட்சி ஊடகங்கள் தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த எந்த அளவு கீழிறங்கவும் மோசடிகளில் ஈடுபடவும் தயங்காது என்பதை  அம்பலப்படுத்தியுள்ளது. 

ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான சந்தர்ப்பவாத தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது.

அரைத்த மாவையே அரைக்கும் நிகழ்ச்சிகள்தான் என்பதையும் சொல்கிறது. 

விஜய் சேதுபதியின் மெருகேறி வரும் நடிப்பு

ஒரு காட்சியில் வந்தாலும் கவனத்தை ஈர்த்த பவர் ஸ்டார்.

வழக்கமான அடுக்கு மொழி வசனங்கள் பேசினாலும் எரிச்சல்பட வைக்காத டி.ஆர்.

குடிகார அரசியல்வாதியாக போஸ் வெங்கட்டும் நன்றாகவே செய்திருந்தார். 

பாடல் காட்சிகளில் கண்ணைக் கவர்ந்த இயற்கைப் பிரதேசங்கள்.

நேர்மையானவர்களுக்கும் கூட ஊடகங்களில் இடம் உண்டு என்பதையும் காண்பித்தது.

இனி 

நெகடிவ்

பாடல்களும் பின்னணி இசையும் பாடாவதியாக இருந்தது.

முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் காணாமல் போயிருந்தது.

பாண்டியராஜன் மற்றும் விஜய் சேதுபதியின் நண்பர்கள் வில்லனுக்கு எதிராக மாறி விடுவார்கள் என்பதை ஊகிக்க முடிந்தது.

பாண்டேவும் கோபிநாத்தும் அர்ணால்டும்தான் பின்பற்ற வேண்டிய  ஊடகவியலாளர்கள் போல சித்தரித்தது.

கூட்டிக் கழித்து பார்த்தால் கவண் கண்டிப்பாக பாஸ் மார்க்கே பெறுகிறது. 

இறுதியாக

அதென்ன தோற்றுப் போன சபதம் என்று தலைப்பு என்று கேட்கிறீர்களா?


உறவைக் காத்த கிளி படத்திற்குப் பிறகு பார்த்த டி.ஆர் நடித்த படம் இதுதான். தியேட்டருக்குச் சென்ற பிறகு போஸ்டரைப் பார்த்த பிறகே அவரும் நடித்துள்ளார் என்று தெரியும். சபதப்படி நடப்பதற்கான சூழலும் அவகாசமும் இல்லை. இது கூட தெரியாதா என்று கேட்காதீர்கள். கதாநாயகி சமந்தா என்றுதான் நினைத்திருந்தேன். அவர் மடோனா செபஸ்டியன் எனும் வேறு நடிகை என்பதே இடைவேளையின் போதுதான் அறிந்து கொண்டேன். திரைப்பட விஷயத்தில் அவ்வளவு அப்டேட்டாக இருக்கிறேன். 

 

 

4 comments:

 1. //கதாநாயகி சமந்தா என்றுதான் நினைத்திருந்தேன். அவர் மடோனா செபஸ்டியன் எனும் வேறு நடிகை என்பதே இடைவேளையின் போதுதான் அறிந்து கொண்டேன்.//

  நீங்களும் என்னை மாதிரியே இருங்கீங்களே :) நானும் படம் பார்க்கும் போது, இவங்க தான் காஜல் அகர்வாலோ, அல்லது ஹன்சிகா என்று நினைத்து கொள்வேன். நண்பர் விளக்கமளிப்பார் நண்பா விஜய்யுடன் வருவது சமத்தா என்று.

  ReplyDelete
 2. Comrade, I too watched the movie yesterday. One more thing in the film was that actor Jagan didn't irritate too much as he always does.

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. மொகபா வின் பதிவுகள் நீக்கப்படும்

   Delete