Thursday, April 20, 2017

பொறுப்பிருக்கான்னு யாரைப் பாத்து கேக்கற?



சீ சீ ரவிசங்கர் சாமியாரின் மைன்ட் வாய்ஸ் கீழே

 

யார் இந்த பசுமை தீர்ப்பாணையம்? என்ன திமிரு இருந்தா உனக்கு பொறுப்பு இருக்கான்னு என்னை பார்த்து கேக்கும்?

நான் கேட்டதுல என்னய்யா தப்பு இருக்கு?

நான் விழா நடத்தினா யமுனை மாசுபடும்னு தெரியும்ல, அப்பறம் என்ன எழவுக்கு எனக்கு பர்மிஷன் கொடுத்தீங்கன்னு கேட்டதல என்னய்யா தப்பு?

பிரதமரு வந்தாரு, ராணுவமெல்லாம் கூலிப்படையா வேலை செஞ்சுது, மோடியோட எப்பவும் முட்டிக்கிட்டே இருக்கற கேஜ்ரிவால் கூட சத்தமில்லாம வந்துட்டு போனாரு, எனக்கும் தெரியும். அத்தனை பேருக்கும் தெரியும், நான் யமுனையை கலீஜ் செய்யப் போறேன்னு. என்னை மாதிரி போலிச்சாமியாருக்கு வசதி செய்யாம இந்தியான்னு ஒரு நாடு எதுக்கய்யா இருக்கு! நான் வேண்டாம்னு சும்மா சொன்னாலும் அரசாங்கமே என்னோட நிகழ்ச்சியா எடுபிடியா நின்னு நடத்தித் தரும். 

அதனால நான் அப்படித்தான் கேட்பேன், ஏன்யா எனக்கு பர்மிஷன் கொடுத்தேன்னு. இதுதான் என்னோட திமிரு, தெனாவெட்டு. 

அதனால் எனக்கு பொறுப்பில்லையான்னு கேட்டுடுவியா?

தம்பி நீதிபதி, என்னை மாதிரி சாமியாரைப் பாத்தியே கேள்வி கேட்கிறயே, உனக்குத்தான் பொறுப்பு கிடையாது.

ஆமாம், பாத்துக்கிட்டே இரு. நீதிபதிங்கற பொறுப்பிலேருந்து உன்னை சீக்கிரமா தூக்கறேன் பாரு.

இது எங்க போலிச்சாமியாருங்க அரசாங்கம்.
எங்க அடிமைதான் பிரதமரு. ஜாக்கிரதை

2 comments:

  1. பசுமை தீர்ப்பாணைய நீதிபதிக்கு ஹிந்து ராஷ்ட்ரம் இந்தியாவில் மலர்ந்து விட்டது என்று தெரியாது போல இருக்கிறது. ;)

    ReplyDelete
    Replies
    1. அந்த நீதிபதிக்கு என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சமும் உள்ளது

      Delete