Tuesday, October 28, 2014

இரானில் பிறந்ததுதான் அப்பெண்ணின் தவறோ?




தன்னை பாலியல் கொடுமை செய்ய முன்வந்தவனை தற்காப்பிற்காக கொன்ற காரணத்திற்காக  இரான் நீதி மன்றம்  ரெஹானா ஜப்பாரி என்ற பெண்ணை தூக்கிலிட்டுள்ளது. 

தன்னை கெடுக்க வந்தவனிடம் மண்டியிட்டு  அண்ணா என்றழைத்து சரஸ்வதி மந்திரம் சொல்லியிருக்க வேண்டும் என்று போக்கிரிச் சாமியார் ஆசாராம் பாபு சொன்னான்.

தன்னை கெடுத்தவனிடமிருந்து தப்பிக்க போராடியது தவறு என்று சொல்லியுள்ளது இரான் நீதிமன்றம்.

அடிப்படைவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்களே.

அப்படிப்பட்ட அடிப்படை வாத நாட்டில் பிறந்ததுதான் அப்பெண் செய்த மிகப் பெரிய தவறு போலும்.

அந்தப் பெண் தனது தாய்க்கு எழுதிய கடிதம் நம் உள்ளத்தை உருகச் செய்யும். அப்பெண் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு   இரான் அரசு என்ன பதில் சொல்லும்?

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. போலிச்சாமியார் ஆசாராம்பாபு சொன்ன அயோக்கியத்தனமான கருத்துக்கும் இரான் நாட்டின் தீர்ப்புக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது புரியாமல் இங்கே ஒரு அனானி போட்ட அநாகரீக பின்னூட்டம் நீக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  3. போலிச்சாமியாரும் இரான் நாடும் நீதியற்றவர்கள்.

    ReplyDelete