Wednesday, October 15, 2014

தண்ணீர் விற்பனையை தடுத்தவர் இன்று?முதலாளித்துவத்திற்கு மாற்றில்லை
என்று முழங்குபவர் காதில்
நாராசமாய் ஒலித்தது
அந்த வெற்றிச் செய்தி.

படை கொண்டு செல்லாமல்
பன்னாட்டுக் கம்பெனிகள் மூலமாய்
ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் செய்யும்
அமெரிக்க கனவான்களின்
உறக்கத்தை கெடுக்கும் வெற்றி அது.

மக்களுக்காக உழைப்பவரை
மக்கள் என்றும் ஆதரிப்பார்கள்
எனும் நம்பிக்கையும்
தந்த வெற்றி இது.

எல்லாரும் எல்லாமும்
பெறுவதை சாத்தியமாக்கியதால்
கிடைத்திட்ட வெற்றி இது.
சரித்திரத்திற்கோர் செய்தி இது.

பொலிவியா எனும் நாடு,
அங்கே கொசாம்பா   எனும் நதி,
இயற்கை அளித்த கொடையை
பேராசை கொண்ட “பெக் டெல்
கம்பெனியிடம் அடகு வைத்தார்கள்,
அந்நாட்டு ஆட்சியாளர்கள்.
நாய் விற்ற காசும் குறைக்காதென்றால்
தண்ணீர் விற்ற காசு மட்டுமென்ன
கசக்கவா செய்யும்?

அழுக்குத் துணி தோய்க்க,
ஆடு மாடு குளிப்பாட்ட,
தாகத்தில் தவித்த வாய்க்கு
ஒரு கை அள்ளிப் பருக,
அனைத்துக்கும் தடை போட்டது,
ஆற்றை விலைக்கு வாங்கிய
ஆள் முழுங்கி ‘பெக் டெல்”

பொங்கிய மக்களை ஒருங்கிணைத்து
போராட்ட களத்திற்கு கூட்டி வந்து
தடையணைகளை நொறுக்கிய
தலைவன் ஒருவன்.

போராட்டத் தலைவனவனை
நாட்டின் தலைவனாகவே
தரம் உயர்த்தினார்கள்
அம்மக்கள்.

வாக்குகளால் உருவான புரட்சி
ஓளி மயமான பொலிவியாவை
உண்மையிலேயே உதிக்கச் செய்தது.

இயற்கை வளத்தை கொள்ளையடித்த
பன்னாட்டு கம்பெனிகளின் கஜானாவிற்குப்
போன பணம் மடை மாற்றப்பட்டு
மக்கள் நலத் திட்டங்களுக்குப் போனது.

பொய் முழக்கங்கள் இல்லை,
போட்டோ ஷாப் ஜோடனைகள் இல்லை.
அலங்கார வார்த்தைகள் இல்லை,
செய்வதும் சொல்வதும் மாறாக இல்லை.

தங்களின் நேசத்தை
மக்கள் மீண்டும் உணர்த்தினார்கள்
தங்களின் வாக்குச்சீட்டுக்களில்.

மூன்றாம் முறையாகவும்
அவனையே தேர்ந்தெடுத்தார்கள்
தங்களின் தலைவனாய்
தங்களுக்கு பணி செய்ய.

அன்று தண்ணீர் விற்பனையை தடுத்தவன்
இன்று தரணி போற்றும் தலைவன்.
ஆட்சியாளர் என்றால் இவனன்றோ
என்று போற்ற வைக்கும்
நமக்கு பொறாமையும் அளிக்கும்
 “இவா மொரேல்ஸ்

தொடரட்டும் உன் பயணம்
சிவப்பின் பெருமையை
அழுத்தமாய்ச் சொல்லி.

5 comments:

 1. இதென்ன கலாட்டா? ... வா

  ReplyDelete
  Replies
  1. "இதிலென்ன கலாட்டா?" - வழக்கம் போல புரியவில்லை தோழர்

   Delete
  2. நாட்டில் உள்ள தண்ணீரை எவன் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், விற்றுக்கொள்ளலாம், பெரு முதலைகள் இஷ்டம் போல் சலுகைகளைப்பெற்று நிறுவனங்கள் துவங்கலாம், அப்படியே அம்போவென விட்டு ஓடலாம், உற்பத்தி செய்கிறவன் குடும்பம் நடு வீதிக்கு வரலாம், இதுதானே நம்ம ஊரு எழுதப்படாத சட்டம். தோழரே உங்களுக்கு எல்லாமே விளக்கித்தான் சொல்லனுமா?. கககபோ மாட்டீர்களா...?

   Delete
 2. Hi Sir,

  Please provide certain words in english(in Bracket) which will be easy for us to find them in google.(ஆள் முழுங்கி ‘பெக் டெல்”)

  Regards,

  ReplyDelete