ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள  627  பேருடைய பட்டியலை வேறு வழியில்லாமல் மோடி அரசு உச்ச நீதி மன்றத்திடம் அளித்து விட்டது. 
வழக்கு நடக்கும்போது அரசு வக்கீலைப் பார்த்து நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளனர். 
"கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ளவர்களை பார்ப்பதில் ஏன் அரசு இவ்வளவு அக்கறை செலுத்துகிறது?"
இதுதான் அக்கேள்வி.
என்ன கேள்விங்க இது யுவர் ஹானர்?
ஏழை விவசாயிகளைப் பாதுகாக்கவா இந்த அரசு  இருக்கு?
கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை வழங்கவா இந்த அரசு இருக்கு?
பெட்டிக் கடை முதல் மளிகை கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளின் நலனை பாதுகாக்கும் அரசா இது?
சிறுபான்மை மக்கள் மீது எந்த தாக்குதலும் நிகழாமல் தடுக்கும் ஆட்சியாளர்களா இவர்கள்?
பெண்கள் மீது நிகழும் கொடுமைகளுக்கான மௌன சாட்சிகளாகவும் இன்னும் கொஞ்சம் மேலே போய் கொடுமைகளை நிகழ்த்துபவர்களை பாதுகாக்கும் அரசுதானே இது?
இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகள் சுரண்டாமல் தடுக்கிற அரசா இது?
இந்தியப் பொருளாதாரத்தை உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் நாசமாக போகாமல் தடுக்கும் அரசா இது?
இந்திய மக்களின்  சேமிப்பு சர்வதேச நிதிமூலதனத்தின் கைகளுக்குச் செல்லாமல் தடுக்கும் அரசா இது?
கோடீஸ்வரர்களால், கோடீஸ்வரர்களுக்காக நடத்தப்படும் கோடீஸ்வரர்களின் அரசு, கறுப்புப் பண முதலைகளை பாதுகாக்காமல் வேறு யாரை பாதுகாப்பார்கள். 
இந்த விவரம் கூட தெரியாதுங்களா ஜட்ஜய்யா? 

 
 
No comments:
Post a Comment