Sunday, October 5, 2014

தனியார் பள்ளிகள் அரசுக்கு அளிக்கும் மாமூலா இது? வெட்கக்கேடு

 http://media2.intoday.in/indiatoday/images/stories//1996December/jayalalitha9_100412090854.jpg
ஜெ வின் விடுதலைக்காக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சலூட்டக் கூடியதாகவும் கேலிக்கூத்தாகவும் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை அதிமுககாரர்கள் உணர்ந்தால் நல்லது.

காலம் கடந்து வழங்கப்பட்ட நியாயமான தீர்ப்பு என்பதையும் தாண்டிக் கூட ஒரு பகுதி மக்களுக்கு ஜெ மீது அனுதாபம் கூட ஏற்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக நடத்தப்படும் போராட்டங்கள், அதிலே பேசப்படும் விஷயங்கள், போராட்டம் நடத்த அதிமுகவைத் தாண்டிய அமைப்புக்களுக்கு அளிக்கப்படும் அழுத்தங்கள் இவையெல்லாம் ஜெ மீது ஏற்பட்ட அனுதாபத்தை குறைத்துக் கொண்டு வருகிறது. 
 

போராட்டங்களில் பேசுகிற பேச்சுக்கள் நாகரீக வரம்பைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.




இந்த நிலையில் பரவலாக எல்லோரையும் கோபப்படுத்தியுள்ள விஷயம் தனியார் பள்ளிகள் நடத்தவுள்ள  வேலை நிறுத்தம். 

ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "அபத்தம்"

கட்டணக் கொள்ளை அடிப்பதால் அரசுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் உள்ளதால் அவர்கள் இப்படி போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது போலும்.

ஆனால் 

இந்த பள்ளிகள் மாணவர்களுக்கு என்ன செய்தி சொல்லித் தரப் போகிறது?

கொள்ளையடி, தவறில்லை
ஊழல் செய், தவறில்லை.
தண்டனை அளித்தால் ஏற்க மறு

என்ற பாடத்தை பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவுள்ளது. 

இது எதிர்காலத் தலைமுறையை தவறான பாதையில் இட்டுச் செல்லும்.

தனியார் பள்ளிகள் தங்கள் முடிவை மாற்ற வேண்டும். அரசாங்கத்தால் மிரட்டப்பட்டால் அந்த உண்மையையும் பகிரங்கமாக பதிவு செய்ய வேண்டும். 

அப்படி அவை செய்யவில்லையென்றால்

திருடர்கள் போலீசிற்கு மாமூல் வழங்குவதாக ஜோக் வருகிறதல்லவா

அது போல

கட்டணக் கொள்ளையடிக்கும் கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அளிக்கும் மாமூல்தான் இந்த வேலை நிறுத்தம் என்று அர்த்தம்.

10 comments:

  1. இப்பொழுது தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்கள் தமிழகத்தையும், நமது இளைய தலைமுறையும் தவறான பாதையில் இட்டுச் செல்கிறது.

    இதற்கெல்லாம் எப்பொழுது விடிவு காலமோ தெரியவில்லை?

    ReplyDelete
  2. இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை.
    ஆனால் இதையும் ஒரு பதிவாக பதிவிடுவதைவிட அபத்தம் வேறில்லை.
    தங்கள் தலைமை மீதுள்ள நம்பிக்கை (அ) பற்று காரணமாக போராடும் அடிமட்ட மற்றும் அடிபட்ட தொண்டர்களை இனியும் முட்டாள்கள் எனக்கருதும் எல்லா தலைமைகளும் திருந்த (அல்லது) வருந்த வேண்டும் தவறின் வருந்த வேண்டி வரும்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல குழப்புகிறீர்கள் தோழரே

      Delete
  3. sir nan manathil ninaiththirunthathai appadiye ezuthi vittirkal sir.
    varuthamaaka irukkirathu sir.

    kadaiciya palli kulanthaikal peyarai solli strike pannuvathu


    ReplyDelete
  4. Comarate.

    Try to Think in School Student Angle.

    Amma Valga....Valga Anna(ukuu) Namam....

    One more holiday one more play day....

    Seshan / Dubai

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ வாஸ்தவம்தான். நான்காவது படிக்கும் என் சகலையின் மகன் "பெரியப்பா இன்னும் ஒரு நாள் லீவ்" என்று சந்தோஷமாக கூறினான்.

      Delete
  5. பள்ளிகளை மூடிவிட்டால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு.... இது கூடத் தெரியாமல்.... வெறும் முண்டமாக எதையும் எழுதவேண்டாம்...

    ReplyDelete
  6. வேற வழியே இல்லை, உம்மை அறிவு கெட்ட முண்டம்னுதான் சொல்லியாகனும். அப்ப பள்ளிக்கூடங்கள் திறந்து இருந்தால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடையாதா? அதுதான் இந்த பள்ளிகளோட லட்சணமா இல்லை அதுதான் இந்த ஆட்சியோட சட்டம் ஒழுங்கு லட்சணமா?
    இப்ப நாளைக்கு பள்ளிகள் செயல்படும்னு சொல்லிட்டாங்களே, அதுக்கு என்னய்யா பதில்?

    ReplyDelete
  7. Excellent article.keep it up.

    ReplyDelete