ஜெ வின் சிறைவாசம் தற்காலிகமாக இருபது நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது.

அதிமுககாரர்களின் உற்சாகக் கொண்டாட்டம் தொடங்கி விட்டது. அது இயல்பானதும் கூட. சிறைக்கு சென்ற போது துக்கம் அனுசரிப்பது எவ்வளவு முக்கியமோ அது போல மகிழ்ச்சியைக் கொண்டாடுவதும் முக்கியம். ஆமாம் எல்லாமே பதிவு செய்யப்படும். கட்சியில் உயர்வும் தாழ்வும் கூட இந்த பங்கேற்பின் அடிப்படையில்தான்.
கொண்டாடுங்கள், நன்றாக கொண்டாடுங்கள். இப்போது கிடைப்பது ஜாமீன்தான். வழக்கிலிருந்து விடுதலை அல்ல, அதற்கே இத்தனை பட்டாசுகளா? இத்தனை ஆட்டமா? இத்தனை இனிப்புக்களா?
கொண்டாடுங்கள்
அதே நேரம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.
தங்கள் கட்சித் தொண்டர்கள் ஒழுங்காக நடந்து கொள்வதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்ற பொறுப்பை உங்கள் தலைவிக்கு உச்சநீதி மன்றம் கொடுத்துள்ளது.
நீங்கள் வரம்பு மீறினால் சிக்கல் உங்கள் தலைவிக்குத்தான். ஜாமீன் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
ஆகவே ஜாக்கிரதையாகக் கொண்டாடுங்கள்.
இப்போதே கொண்டாடி விடுங்கள்.
மேல்முறையீட்டில் எப்படிப்பட்ட தீர்ப்பு வருமோ?
No comments:
Post a Comment