Wednesday, October 1, 2014

ஜெ கைது - போயஸ் கார்டனில் வெடி வெடித்து கொண்டாடினார்களாம்

என் மகன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.

நேற்று அவன் கல்லூரியிலிருந்து வரும் போது காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அதிமுக பேச்சாளர்களில்   ஒருவர்  மிகவும் உணர்ச்சிகரமாக பேசினாராம்.

"தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பாகவே போயஸ் கார்டனில் வெடி வெடித்து கொண்டாடியுள்ளார்கள். அம்மாவிற்கு இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று அவர்களுக்கு முன்பே தகவல் வந்துள்ளது. இதிலிருந்து தெரியவில்லையா" என்று அவர்  முழங்கிக் கொண்டே போக இன்னொருவர் அவர் பேசுவதை நிறுத்தி "அது போயஸ் கார்டன் இல்லையா, கோபாலபுரம்" என்று திருத்தியுள்ளார். 

.ஓ.பி.எஸ் சார், உங்காளுங்களுக்கு கொஞ்சம் வரலாறு,புவியியல் எல்லாம் சொல்லிக் கொடுங்க

1 comment:

  1. அவன் அவன் வீட்டுல பாயசம் வச்சி கொண்டாடியிருக்கமாட்டான்னு நினைக்கிறீங்க?

    ReplyDelete