Monday, October 6, 2014

எல்லா ஏ.டி.எம் மும் ஏமாத்தறாங்கடா........

சற்று முன்பாக நான் சந்தித்த ஒரு அனுபவம்.
 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்றிருந்தேன். எனக்கு முன்பாக ஒருவர் வரிசையில் நின்றிருந்தார். அவருக்கு முன்பாக பணம் எடுத்துக் கொண்டு இருந்தவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தவர்கள்  பணத்தை எண்ணிக் கொண்டு இருக்கும் போதே "சீக்கிரம் வெளிய வாங்கப்பா, நாங்கள்ளெல்லாம் எடுக்க வேண்டாமா" என்று சவுண்ட் கொடுக்க, அவர்களும் வெளியே வந்து விட இவர் உள்ளே போனார்.

இவர் மீண்டும் மீண்டும் முயற்சிக்க பணம் மட்டும் வரவேயில்லை. "சார் நீங்க கொஞ்சம் ஹெல்ப் செய்யுங்க" என்று என்னை அழைக்க, நானும் அவருக்கு உதவப் போனேன். பின் நம்பரை மட்டும் அவரையே தட்டச் சொல்ல அவர் அதைச் செய்தார். அவர் சொன்ன 1500 ரூபாய் கணக்கில் இல்லை என்று ஏ.டி.எம் சொல்லி விட்டது. பேலன்ஸ் எவ்வளவு என்று பார்த்து முயற்சி செய்யுங்கள் என்று சொன்னதற்கு  "என் அக்கவுண்டில எவ்வளவு பணம் இருக்குன்னு  எனக்கு தெரியாதா? எதுக்கு இந்த மெஷினை கேட்க வேண்டும்" என்று வீராப்பாக சொல்லி விட்டு 1000, 500 என்று குறைத்துப் போட்டாலும் அதே பதில்தான். ஆனால் அவர் பேலன்ஸ் என்கொயரி மட்டும் பார்க்க தயாராகவே இல்லை. வந்த ஸ்லிப்களை எல்லாம் கோபத்தோடு குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வெளியே போய் விட்டார்.

நான் பணத்தை எடுத்து விட்டு கிளம்பும் போது பார்த்தால் அவர் எதிரே இருந்த கர்னாடகா வங்கி ஏ.டி.எம் மிலிருந்து அதே கோபத்தோடு ஸ்லிப்பை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டார். 

பிறகு நான் சத்துவாச்சாரியில் கறிகாய் வாங்கி விட்டு கிளம்பு போது மீண்டும் அவரை பார்க்க நேர்ந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம் வாசலில் நின்று கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

"எல்லா ஏ.டி.எம் காரனுங்களும் ஏமாத்தறங்கடா, என் பணத்தை தர மாட்டேங்கராங்க"

இன்னும் எத்தனை ஏ.டி.எம் போனாலும் பணம் கிடைக்காது என்பதை உண்ர அவரால் முடியவே முடியாது.

ஆம் அதுதான்  டாஸ்மாக்கின் சக்தி.

3 comments:

  1. Tholare, unga ATM card kuduthu help paneerukalamla...

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு? என் காசையும் அந்த மனிதர் டாஸ்மாக்கில் கொண்டு போய் அழிப்பதற்கா? சரியான ஆக்கங்கெட்ட கூவை ஐயா நீர்

      Delete
  2. ஆகா இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete