நேற்றைய ஹிந்து நாளிதழ் தகவல்படி நில
ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியுள்ள சிக்கிம்
மாநில தலைமை நீதிபதி பி.டி.தினகரன்
தனது பதவி விலகல் கடிதத்தை உச்ச நீதி
மன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் " ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில்
பிறந்ததன் துரதிர்ஷ்டத்தைத்தான் அனுபவிக்கிறோமோ
என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது. ஒடுக்கப்பட்ட
சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயர் பதவிகளுக்கு
வரும் போது அவர்கள் நேர்மை, பொய்யான,
விஷமத்தனமான வதந்திகள் மூலம் கேள்விக்குள்ளாகப்
படுகின்றது. ஆனால் மற்றவர்களோ சில சக்திகளால்
எப்போதும் அரவணைக்கப்படுகின்றனர்.
எனக்கு பதவி ஆசை கிடையாது என்பதையும் ,
பதவியின் கவுரவத்தை காக்கவும் , இழுத்தடிக்கும்
உத்திகளில் நம்பிக்கை இல்லை என்பதை
நிரூபிக்கவும் பதவி விலகுகின்றேன் "
என்பது அவரது கடிதத்தின் வாசகங்கள்.
நில ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்று திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர் அறிக்கை கொடுத்தபோதோ,
இவரது நீதிமன்றத்தில் வழக்காட மாட்டோம் என
பெங்களூர் உயர் நீதி மன்ற வக்கீல்கள் முடிவெடுத்த
போதோ, அல்லது அவர் மீது நாடாளுமன்ற
உறுப்பினர்கள் புகார் கொடுத்து நாடாளுமன்றம்
குழு அமைத்தபோதோ இவர் பதவி விலகியிருந்தால்
இவர் சொன்னது எல்லாம் கேட்க நன்றாக
இருந்திருக்கும்.
ஆனால் நாடாளுமன்றம் இவர் மீதான பதவி விலகல்
நடவடிக்கையை தொடங்கும் நேரம் ராஜினாமா
செய்வது என்பது அதிகமாக அசிங்கப்படுவதை
தடுக்கும் முயற்சியன்றி வேறொன்றுமில்லை.
என்ன பிரச்சினை முற்றும் வேளையில் இவரும்
ஜாதிய கேடயத்தை தூக்கி விட்டார். கலைஞர்
காட்டிய சிறப்பான வழியில் நீதிபதியும்
பயணிக்க வந்து விட்டார்.
இவருக்கு ஆதரவாகவும் தி.க வீரமணி,
நக்கீரன் கோபால், பாதிரியார் ஜகத் கஸ்பர்
ஆகியோர் கூட்டம் போடுவார்களோ!
நல்ல பதிவு.
ReplyDeleteஇதற்கு இவ்வளவு காலங்கள் ஆகி விட்டன.
வாழ்த்துக்கள்.