அமெரிக்க நாடு ஒரு சிக்கலான பொருளாதார நிலையை
சந்தித்துள்ளது. அமெரிக்காவின் கடன் தொகை என்பது
அதிகரித்து விட்டது. அதன் கையிருப்பு நிதி என்பது
இப்போது மிகக் குறைவாக உள்ளது. அமெரிக்க
கஜானாவில் உள்ளதை விட ஆப்பிள் கம்ப்யூட்டர்
நிறுவனத்திடம் கூடுதல் கையிருப்பு உள்ளதாக
இன்றைய செய்திகள் சொல்கின்றது.
அமெரிக்காவின் கடன் தொகை வரம்பை
உயரத்தாவிட்டால் அமெரிக்க அரசால் ஆகஸ்ட்
2 ம் தேதிக்குப் பின்பு எந்த செலவும் செய்ய முடியாது.
அரசு தர வேண்டிய எந்தத் தொகையையும் பட்டுவாடா
செய்ய முடியாது. ஊழியர் ஊதியங்கள், ஓய்வூதியம்,
ஒப்பந்தக்காரருக்கான தொகைகள் என எல்லாமே
நின்று போய்விடும். வெள்ளை மாளிகைக்கு காய்கறி
வாங்கக் கூட காசு இருக்காதாம்.
அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதித்த கடன்
அளவான 14 .3 ட்ரில்லியன் டாலர் என்ற அளவு
தாண்டி விட்டது. இந்த அளவை அதிகரிக்க வேண்டும்.
இல்லையென்றால் அமெரிக்க நிர்வாகம் ஸ்தம்பித்துப்
போய்விடும். செய்ய வேண்டியதுதானே இதிலென்ன
சிக்கல் என கேட்கலாம்.
அங்கேதான் வருகின்றது அரசியல்!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமாவின் ஜனநாயகக்
கட்சியை விட குடியரசுக் கட்சிக்குத்தான் அதிக உறுப்பினர்கள்
உண்டு. எனவே குடியரசுக் கட்சியின் தயவு இல்லாமல்
கடன் தொகையை உயர்த்த முடியாது. இந்த வாய்ப்பை
குடியரசுக் கட்சி நன்றாகவே பயன்படுத்துகின்றது.
புஷ்ஷால் பறி போன ஆட்சியை திரும்பப் பெற ஒபாமாவால்
நிர்வாகம் செய்ய முடியவில்லை என்று காண்பிக்கப் பார்க்கிறது.
செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்று ஜனநாயகக்
கட்சி நாடகம் போட, நாட்டின் மீது , மக்கள் மீது கவலையே
இல்லாமல் உள்ளார்களே என ஒபாமா புலம்ப, பாவம் அவர்
தூங்கியே பல நாட்கள் ஆகி விட்டது என அவரது கைத்தடிகள்
புலம்ப சாதா பேச்சு வார்த்தை, மசாலா தோசை பேச்சு வார்த்தை,
டீ பார்ட்டி பேச்சு வார்த்தை என நடந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் மக்கள் எவ்வித கவலையும் இல்லாமல் உள்ளார்கள்.
இது மோடி மஸ்தான் நடத்தும் பாம்பு - கீரி நாடகம் என்று
அவர்களுக்கு தெரியும். இது போல பல முறை கடன் தொகை
அளவு உயர்த்தப்பட்டதுதான் அமெரிக்க பொருளாதார வரலாறு.
இப்போதும் அது நடக்கத்தான் போகிறது.
முதலாளித்துவத்தின் தாயகத்தில் அரசியல்வாதிகள் வெறும்
சொக்கட்டான் காய்களே. முடிவு செய்யப் போவது பெரும்
முதலாளிகளும் சர்வதேச நிதி மூலதனமும்தானே. அவர்கள்
சமரச நாடகத்தை அரங்கேற்றுவார்கள்.
accurat news
ReplyDeleteஅமெரிக்க பொருளாதாரம் நொண்டினாலும் இன்னும் நிமிர்ந்து நிற்கும் தன்மை அதற்கு உண்டு.அமெரிக்கப் பொருளாதார மையம் என்ற சூரிய வட்டத்தையே இன்னும் அனைத்து நாடுகள் என்ற கோளங்கள் சுற்றி வருகின்றன.
ReplyDeleteஅதான் நடந்திருக்கு இப்போ. 2.3 trillon ஏத்திட்டாங்க
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்! அதனால்தான் இன்று ஸ்டாக் மார்க்கெட் டௌன் இங்கே, எப்படியும் டெப்ட் சீலிங் உயர்த்தப்படும் என்று தெரிந்த பின்னும்!
ReplyDelete