Tuesday, July 5, 2011

கோயில்களா அல்லது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் பெட்டகமா?

திருவனந்தபுரம் பத்மநாபர் ஆலயத்தின்  ரகசிய அறைகளில்  உள்ள 
தங்க, வைர ஆபரணங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை 
நெருங்கி விட்டது  என்ற செய்தி  உண்மையிலேயே  தலை சுற்ற 
வைக்கிறது. இதெல்லாம்  கோயிலுக்குத்தான்  சொந்தம் என்று 
அவசரம் அவசரமாக  பல தரப்பு குரல்கள்  எழுகின்றது. பத்மனாபருக்கு
சொந்தம்  என்றால் அது என்ன அவர் பாற்கடலில் இருந்து கொண்டு 
வந்ததா என்ன? 


அரசர்கள்  அளித்தவை, ஜமீன்தார்கள் தந்தது, முதலாளிகள்  தந்தது
என்றெல்லாம் விளக்கம் வரலாம். இவர்களுக்கு  எப்படி வந்தது 
சொத்து? மக்களை சுரண்டி, கொள்ளையடித்து சேர்த்ததுதானே!  
ஆலயத்துக்கு  உள்ளே  வைத்து  அழகு பார்க்கவோ, அரசின் 
செலவில்  பாதுகாக்கவோ  அவசியமில்லை. இதனை அரசே 
எடுத்துக் கொள்ளட்டும். மக்களுக்கு செலவழிக்கட்டும். 
ஒரு கோயிலில் மட்டுமே  இவ்வளவு என்றால் மற்ற கடவுள்கள்
மட்டும் பிச்சைக்காரர்களாகவா  இருந்திருக்கப் போகின்றனர். 
அனைத்து ஆலயங்களிலும் இந்தியா முழுதுமே  இப்பணி 
நடக்கட்டும். 


சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை விட பல மடங்கு
அதிகமாகவே  கோயில் பொக்கிஷங்கள்  இருக்கும் போல 
தோன்றுகின்றது.  இப்பணத்தையும்  கைப்பற்ற  வேண்டும் 
என ஹசாரே, ராம்தேவ்  கூட்டம் குரல் கொடுக்குமா?  

4 comments:

  1. these wealth has been offered by various people during various periods in order to keep the money safely. it was hidden secret till today. but now it is revealed and politicians want to loot the huge wealth...... is this correct?

    ReplyDelete
  2. உங்கள் வார்த்தைகளில் நாகரீகம் தேவை

    ReplyDelete
  3. எனது வார்த்தைகளில் கடுமை இருக்கும், நக்கல்
    இருக்கும், நாகரீகக் குறைவாக என்றுமே
    எழுதுவதில்லை. இக்கட்டுரையில் எது நாகரீகக்
    குறைவான வார்த்தை என்று சுட்டிக்காட்டினால்
    பரவாயில்லை. மறைந்து பேசுவதும் நாகரீகம்
    இல்லை.

    ReplyDelete