என்னுடைய அனுபவத்திற்கு மரியாதை கொடுக்காமல்
என்னை காபினெட் மந்திரியாக்காமல் இணை மந்திரியாகவே
வைத்திருக்கின்றார்கள் என இரண்டு நாட்கள் முன்பு ஒரு
புலம்பல் குரல் கேட்டது நினைவில் உள்ளதா? ஒரிஸாவைச்
சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த ஜேனாவின்
புலம்பல் அது!
அந்த புலம்பலைக் கேட்ட போது இந்த மூஞ்சியை
எங்கயோ பாத்திருக்கேனே! என்று தோன்றியது.
ஞாபக அடுக்குகளில் தேடிய போது நினைவிற்கு
வந்து விட்டது.
1990 ம் வருடம் கட்டாக் நகரில் எங்கள் சங்கத்தின்
அகில இந்திய மாநாடு நடந்தது. வி.பி.சிங் ஆட்சியைக்
கவிழ்த்து பொம்மையாக சந்திரசேகரை பிரதமராக்கி,
இரண்டு கான்ஸ்டபிள்கள் உளவு பார்க்கிறார்கள் என
அவரையும் கவிழ்த்து காங்கிரஸ் ரத்த ருசி பார்த்திருந்த
நேரம் அது.
எங்கள் மாநாட்டு வரவேற்புக்குழு புரவலர் ஸ்ரீகாந்த
ஜேனா. வி.பி.சிங் அமைச்சரவையிலும் அவர்
இணை அமைச்சர். துவக்க விழாவில் அவர் வீர
உரையாற்றினார். " சந்திர சேகருக்கு ஆதரவாக
என்னை கட்சி மாறச் சொன்னார்கள், ஐம்பது லட்சம்
ரூபாய் பணம் தருவதாக சொன்னார்கள், காபினெட்
மந்திரி பதவி தருவதாக சொன்னார்கள்.
பணத்திற்காகவோ, பதவிக்காகவோ
என்னை விற்க நான் விரும்பவில்லை. மக்களின்
எதிரியான காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்
நடைபெறும் அரசில் அமைச்சராக இருப்பதை விட
தெருவில் நிற்பது மேல்" என அவர் முழங்கியது
துரதிர்ஷடவசமாக நினைவிற்கு வந்து விட்டது.
அந்த கொள்கை வீரர் எப்போது மக்கள் விரோத
காங்கிரஸ் கட்சிக்குப் போனார் என்று தெரியவில்லை.
தெருவில் நிற்க முடியாமல் காங்கிரஸ் கட்சிக்கு
வந்து விட்டார் போலும்.
அவர் அன்று பேசிய வீர உரைக்கு நாங்கள்
விழுந்து விழுந்து கை வேறு தட்டினோம்.
இது நமது துரதஷ்டம்...
ReplyDeleteஅரசியல்வாதி தானே!
ReplyDelete