அட . . . . பத்மனாபா!
ஐம்பொன் ரத்தினங்கள்
ஐந்து அறையில் தங்கக் குவியல்கள்
ஆறாவது. . . திறக்கவேயில்லை...
ஆனாலும் மதிப்பு லட்சம் கோடி
உணவு, உடல் நிலை, கல்வி
எதற்கும் பயன்படாமலே . .
நூற்றைம்பது வருடங்களாய் ...
யார் இதைக் கொண்டு வந்தது?
யாரிடம் இதை கேட்பது?
எதைக் கொண்டு வந்தாய்
நீ இழப்பதற்கு -
என்று உபதேசம் செய்தவனிடமா?
அட பத்மனாபா!
கவிதை : மதுரை பாரதி
ராமன் அவர்களே ! மதுரை பாரதியை தனியாக ஒரு தளத்தை உருவாக்கச்சொல்லுங்கள். சில சமயங்களிலவருடைய எழுத்துக்களை படிக்க முடியாமல் போய்விடுகிறது ,---காஸ்யபன்
ReplyDelete