சிவகங்கைச் சீமான் ப.சிதம்பரத்திற்கு இதுதான் நல்லதொரு
வாய்ப்பு. மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு சிவராஜ் பட்டீலை
கழற்றி விட்டு உள்துறை அமைச்சர் பொறுப்பை அவர்
தலையில் கட்டி விட்டார்கள். பாவம் இஷ்டமே இல்லாமல்
உள்துறை அமைச்சராக கஷ்டப்பட்டு வண்டியோட்டிக்
கொண்டிருக்கும் ப.சிதம்பரத்திற்கு இதுதான் வாய்ப்பு.
தார்மீக பொறுப்பேற்பதாக சொல்லி உள்துறை அமைச்சர்
பதவியை ராஜினாமா செய்து விடலாம், மற்ற சில பல
சர்ச்சைகளிலிருந்தும் தப்பித்து விடலாம். தியாகச்
செம்மல் என்று ஜால்ரா தட்ட மகன் கார்த்தி சிதம்பரத்தின்
எடுபிடிகளும் இருக்கவே இருக்கிறார்கள்.
ஆனால் பசி யிடமிருந்து இப்படிப்பட்ட நடவடிக்கையெல்லாம்
எதிர்பார்க்க முடியாது. பிறகு சிவகங்கை தொகுதியில்
மோசடி செய்து வெற்றி பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல்
போய் விடுமே!
No comments:
Post a Comment