Saturday, July 16, 2011

இன்றோடு இருபத்தி ஐந்து ஆண்டுகள்

எல்.ஐ.சி நிறுவனத்தில் இணைந்து இன்றோடு இருபத்தி ஐந்து ஆண்டுகள்
முடிந்து விட்டன. 16 ஏப்ரல் 1986  அன்றிலிருந்தே  பணி துவங்கினாலும்
அது பயிற்சிக்காலம். தகுதி காண் பருவம் தொடங்கியது 16 ஜூலை 1986.
ஆக இன்றோடு  25 ஆண்டுகள்  கடந்து விட்டது. 



25 ஆண்டு  அனுபவங்கள்  என்னை  மாற்றியுள்ளதா  எனப் பார்த்தால்
நான்  மிகவும் மாறியுள்ளேன்  என்பதுதான்  உண்மை. எல்.ஐ.சி மாற்றியது
என்று சொல்வதை  விட எல்.ஐ.சி யின் ஜீவனாய் இருக்கிற  அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  மாற்றியது  எனச் சொல்வது இன்னும்
பொருத்தமாக  இருக்கும்.

1986 ல் பணியில் சேர்ந்த போது இருந்தது  ஒரே ஒரு கனவுதான். மிகக்
கடுமையாக சிரமப்பட்டு படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும்.
குறைந்த பட்சம் எல்.ஐ.சி யிலாவது  முதல் நிலை அதிகாரியாக
வேண்டும்  என்பதுதான். 1987 ஜனவரியில் முதன் முதலாக நெய்வேலி
கிளைச்சங்கத்தின் பொறுப்பாளரான பின்புதான் ஒரு புதிய உலகிற்கான
பாதை திறந்தது.



படித்த புத்தகங்கள், கிடைத்த தொடர்புகள் எல்லாமே என்னை வேறு
திசையில் பயணிக்க வைத்தது. சனிக்கிழமை தோறும் நவக்கிரகங்களை
ஒன்பது  சுற்று  சுற்றி, சனி பகவானுக்கு எள்ளும் நல்லெண்ணையும்
கொண்டு சென்றவனை கடவுள் யார் என்று  கேட்க வைத்தது. 



அதிகாரியாக  வேண்டும்  என  ஆசைப்பட்டவனுக்கு  அதிகார வர்க்கத்தின்
கோர முகம் எப்படி இருக்கும்  என்ற அனுபவத்தை  உணர்த்தியது. பார்க்க
அழகாக காட்சியளிக்கும்  தலைவர்கள்  உள்ளுக்குள்  எவ்வளவு அசிங்கமாக உள்ளனர்  என்பதை  அறிந்து கொள்ள வழி காட்டியது. ( ராஜீவ் காந்தியும் ராமகிருஷ்ண ஹெக்டேவும்) 



அலுவல்கம் வந்து பணி செய்து ஊதியம் வாங்கிப் போவதோடு வாழ்க்கை
நின்று போவதல்ல, அதனையும் தாண்டியது  என்பதை  சுட்டிக்காட்டியது
எனது  அமைப்பு. அதிகாரியாகப் போயிருந்தால்  என்ன பொருளாதார
மேம்பாடு  கிடைத்திருக்குமோ அதனை மூன்றாம் பிரிவு ஊழியருக்கும்
பெற்றுத் தந்தது  எனது  சங்கத்தின் சாதனை.



சமூகத்தில்  அந்தஸ்தை உருவாக்கித் தந்தது எல்.ஐ.சி.
சமூகத்தின் மீது அக்கறையுள்ள மனிதனாய் மாற்றியது
அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கம்.
இருவரையும்  நான் நேசிக்கிறேன்.



இருபத்தி ஐந்து ஆண்டுகள்  நிறைவடைந்துள்ள நாளில்
இருவருக்கும் எனது  நன்றி 





நான்   அன்றும்  இன்றும்


5 comments:

  1. ராமன் அவர்களே! சந்திர சேகர போஸ்,சரோஜ் சவுத்திரி, சுனில்மைத்ரா ,முகுல் முஸ்தவி, பிரத்யொத் நாக் எப்படிப்பட்ட தலைவர்கள்!.எப்படிப்பட்ட பாரம்பரியம்! .என்.எம்.சுந்தரம்,வேணுகோபால் எப்படிப்பட்ட வழித்தோன்றல்கள்!.அந்த உயர்ந்த நிலையை நீங்களும் அடைய வாழ்த்துகிறேன் ---காஸ்யபன்

    ReplyDelete
  2. Dear Comrade,

    Thank You for your wishes. I can watch all these
    leaders from a distance and can only follow
    their footprints

    ReplyDelete
  3. கடவுள் யார் என்று கேட்டதாக சொல்கிறீர்கள்? ஆனால் கோவிலின் முன்பு தான் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்ன மோசடி இது?

    ReplyDelete
  4. ஐயா, செந்திலான்,
    அது கோயில் அல்ல,
    வள்ளுவர் கோட்டம்

    ReplyDelete
  5. அன்பான தோழரே,
    எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள், 3ம் 4ம் பிரிவு ஊழியர் நலன் காக்க
    எல்ஐசியில் மட்டுமல்லாது மற்றஅனைத்து துறைகளில் உள்ளவர்களுக்காகவும்
    தாங்கள் செய்யும் பணி மகத்தானது. தாங்கள் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ
    வாழ்த்தும்.
    தோழர். கே.சுந்தரராஜன்,
    அரக்கோணம்.

    ReplyDelete